இந்திய சினிமாவை பொருத்தவரை ஒரு திரைப்படத்துடன் இன்னொரு திரைப்படம் மோதுகிறது என்றால் அந்த திரைப்படத்தில் எந்த திரைப்படம் வெற்றி என்பதை அதன் வசூலை பொறுத்து கணிக்க முடியும் அந்த வகையில் இரண்டு திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெளியானாலே ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் தான். அப்படிதான் கடந்த பொங்கல் தினத்தில் அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியானது.
துணிவு திரைப்படத்தை வினோத் அவர்கள் இயக்கியிருந்தார் அதேபோல் வாரிசு திரைப்படத்தை வம்சி அவர்கள் இயக்கியிருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டத்தை கொடுத்தது. மேலும் ஒவ்வொரு நாளும் இதன் வசூல் மாறிக்கொண்டே இருந்தது அந்த வகையில் இரண்டு திரைப்படமும் நல்ல வசூலை பெற்றது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பாலிவுட் சினிமா கடந்த சில வருடங்களாகவே பின் தாங்கி இருந்து வருகிறது வசூலில், அதனால் அதனை எப்படியாவது தூக்கி நிறுத்த வேண்டும் என ஒவ்வொரு நடிகரும் தங்களுடைய திரைப்படத்தில் நன்றாக நடித்து வருகிறார்கள் அந்த வகையில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கி இருந்தார்.
சில வருடங்களுக்குப் பிறகு ஷாருக்கான் நாயகனாக திரையில் தோன்றியுள்ளதால் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்துள்ளது இந்த திரைப்படத்தில் நாயகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சிறப்பு தோற்றத்தில் கடைசியாக சல்மான் காணும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தாலும் ரிலீஸ் ஆகி தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது அதனால் வசூலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தி வருகிறது. கடந்த 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிய இந்த திரைப்படம் மூன்றே நாட்கள் முடிவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் இதை பார்த்த சில ரசிகர்கள் அஜித்தின் துணிவு விஜயின் வாரிசு ஆகிய திரைப்படத்தின் வசூலை மூன்றே நாளில் ஷாருக்கானின் படம் துவம்சம் செய்துள்ளது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.