பாலிவுட் பாட்ஷா என அனைவராலும் அழைக்கப்படுவர் நடிகர் ஷாருக்கான். ஆரம்பத்தில் அதிக ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் ஒரு கட்டத்தில் வருடத்திற்கு ஒரு படங்களை கொடுக்க ஆரம்பித்தார். இப்படி ஓடிக்கொண்டிருந்த நடிகர் ஷாருக்கான் அவ்வபொழுது சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வது வழக்கமான ஒன்று தான்.
இருப்பினும் அதையெல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல் படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் நடித்த பதான் திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்து வசூல் வேட்டை அள்ளி வருகிறது இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.
வெகு விரைவிலேயே ஆயிரம் கோடியை தொட்டு ஒரு புதிய சாதனை படைக்கும் என சொல்லப்படுகிறது. பதான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கதில் உருவாகி வரும் ஜவான் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படமும் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது இதில் நயன்தாரா, சானியா மல்கோத்ரா, யோகி பாபு, ப்ரியா மணி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அவருடைய முழு சொத்து மதிப்பு மட்டுமே 6000 கோடி என சொல்லப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு மட்டுமே 240 கோடி கிட்டத்தட்ட ஷாருக்கான் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது இதை கேட்ட ரசிகர்கள் உங்களுடைய சொத்து மதிப்பு கேட்ட உடனேயே எங்களுடைய ஹார்ட் பீட் அதிகமாக அடிக்கிறது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.