சினிமா உலகம் எப்படி என்பதை நடிகர், நடிகைகள் என்னதான் தெரிந்துகொண்டு பயணித்து இருந்தாலும் போகப்போக படங்களில் நடிக்கும் போது தான் அதை உணரமுடியும். சினிமா என்றால் எனவே தெரியாமல் காசு பார்க்க தான் சினிமா உலகில் முதலில் காலடி எடுத்து வைத்தவர் விஜய்சேதுபதி பின் நாட்கள் போகப்போக சினிமா எப்படிப்பட்டது என்பதை உணர்ந்து கொண்டார்.
அதன்பின் விஜய் சேதுபதி சினிமாவுலகில் நல்ல பெயரைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முதன்முதலாக விஜய் சேதுபதியை தேர்வு செய்கின்றனர். அந்த காரணத்தினால் நடிகர் விஜய் சேதுபதியும் சிறப்பான படங்களை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் படத்தின் கதைக்கு ஏற்றவாறு எந்த ரோல் கொடுத்தாலும் அதில் திறம்பட நடித்திருக்கிறார்.
இவர் இதுவரை ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், கெஸ்ட் ரோலில் என அனைத்திலும் நடித்து தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப் படங்களை கொடுத்து அசத்தியுள்ளார் தமிழ் தாண்டி மற்ற மொழிகளில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருப்பதால் விஜய்சேதுபதி அசுர வளர்ச்சியில் சினிமாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சமீபத்தில் நடித்த துக்ளக் தர்பார், லாபம் ஆனால் சேதுபதி அனபெல் ஆகிய மூன்று படங்களும் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் பெரிய அளவில் வசூல் நடத்தவில்லை இருப்பினும் விஜய்சேதுபதியை மன சோர்வு அடையாமல் அடுத்தடுத்த சிறந்த இயக்குனர் உடன் கைகோர்த்து நடித்து வருகிறார். அந்த வகையில் வெற்றிமாறனுஉடன் முதல்வதாக கைகோர்த்து “விடுதலை” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்திலும் ஹீரோவாக நடிதுயுள்ளார். இதன் மூலம் தனது ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க ரெடியாக இருக்கிறார் விஜய் சேதுபதி இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு புதிய காரை வாங்கி உள்ளார் அந்தக் காருடன் அவர் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது விஜய்சேதுபதியை ஒரு கார் பிரியர் அதனால் சமீப காலமாக பழைய மற்றும் புதிய கார்களை வாங்கி குவித்து வருகிறார்.
