சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த நடிகர் ஒரு படத்தில் இணையும் பொழுது அந்த படம் ஆட்டோமேட்டிக் ஆகவே வெற்றிப்படமாக மாறிவிடும் அந்த வகையில் செல்வராகவன் மற்றும் தனுஷ் ஆகிய இருவரும் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக மாறி உள்ளன.
அந்த வகையில் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, மயக்கம் என்ன, ஆகிய படங்களில் தனுஷூம் செல்வராகவனும் இணைந்து பணியாற்றி உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது அதனை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் – செல்வராகவன் இணைந்து நானே வருவேன் திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் செல்வராகவன் வேறு படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் கீர்த்தி சுரேஷுடன் கைகோர்த்து சாணி காயிதம், விஜய் உடன் கை கோர்த்தது பீஸ்ட் மற்றும் இப்பொழுது தனுஷுடன் இணைந்து நானே வருவேன் படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நானே வருவேன் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது தனுஷ் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் செல்வராகவன் இந்த படத்தை இயக்கி நடிப்பதால் இவரது நடிப்பும் வேற லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் செல்வராகவன் இந்த படத்தில் எந்த மாதிரி ரோலில் நடிக்கிறார் என்பது குறித்தும் ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
நரைத்த தாடி கண்ணாடியை போட்டுக்கொண்டு செம்ம மாஸாக செல்வராகவன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. நானே வருவேன் படத்தில் ராகவன் இந்த லுக்கில் தான் நடிக்க போகிறாராம். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
#naanevaruven @theVcreations@dhanushkraja @thisisysr pic.twitter.com/Tiao8wqiHd
— selvaraghavan (@selvaraghavan) April 2, 2022