சிறுத்தையை வீட்டில் வளர்த்த பிரபல நடிகை.? இதுக்கெல்லாம் தனி தில்லு வேணும் – வைரலாகும் புகைப்படம்

Savitri : தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜிக்கு நிகராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகை சாவித்திரி. எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தைரியமாக நடித்து வெற்றியை கண்டவர். முதலில் “கல்யாணம் பண்ணிப்பார்” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தேவதாஸ், மனம் போல் மாங்கல்யம், குணசுந்தரி, மாமன் மகள், மகேஸ்வரி, அன்னையின் ஆனை, கடன் வாங்கிய கல்யாணம், வணங்காமுடி, எங்கள் வீட்டு மகாலட்சுமி என வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் 1955 ஆம் ஆண்டு ஜெமினி கணேசனை திருமணம் செய்து கொண்டார்.

தாத்தா வயதிலும் இளமை குறையாமல் இருக்கும் 5 முன்னணி நடிகர்கள்.. சிக்ஸ் பேக் வைத்து மிரட்டும் ஹீரோ

இவர்களுக்கு விஜய சாமுண்டீஸ்வரி, சதீஷ் என்று ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். சினிமா உலகில் எவ்வளவு வெற்றியை கண்டாரோ அதே அளவிற்கு சந்தோஷமாகவும் வாழ்ந்துள்ளார் தற்பொழுது இருக்கும் நடிகைகள் வீட்டில் தன்னுடைய பொழுதை கழிக்க  செல்லப் பிராணிகளை வளர்ப்பது வழக்கம்.

அதிலும் தற்பொழுது இருக்கும் நடிகைகள் நாய், பூனை என்றால் வாங்கி குவிக்கிறார்கள் ஆனால் நடிகை சாவித்திரி அதற்கு எதிர் மாறாக இருந்திருக்கிறார் இவர் அப்பொழுது வீட்டில் சிறுத்தையை வளர்த்திருக்கிறார்.நடிகை சாவித்திரி வீட்டில் சிறுத்தையை உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

Biggboss 7 : அர்ச்சனாவை தாக்கி பேசிய நிக்சன்.. இது போதுமா இன்னும் வேணுமா.. குவியும் பாராட்டுகள்

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நாய், பூனை, மாடு சிலர் குதிரை வளர்ப்பார்கள் ஆனால் சாவித்திரி அவர்கள் சிறுதையை வளர்த்தது வேற லெவல் என கூறி கமெண்ட் எடுத்து லைக்களை தட்டி வீசி வருகின்றனர் இதோ நடிகை சாவித்திரி சிறுத்தையுடன் இருக்கும் அந்த அழகிய புகைப்படம்.

Savitri
Savitri