விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தற்பொழுது பிரபல நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்திருக்கும் நிலையில் இந்த சீரியலின் கதை இதற்கு மேல் ட்ராக் மாற இருக்கிறது. எனவே இதற்கு மேல் இனி பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோவாக நடித்த வரும் கோபி இருப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் அது குறித்து மீண்டும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் முக்கியமாக கோபிக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியல் இந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாக கோபி தான் முக்கிய காரணம் டிஆர்பியின் முதல் ஐந்து இடங்களை பிடித்து வரும் இந்த சீரியலில் இருந்து கோபி விளக்குகிறார் என கூறப்படுகிறது.
அதாவது கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் ரஞ்சித் என்ட்ரி கொடுத்தவுடன் வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் இதற்கு மேல் தன்னுடைய கதாபாத்திரம் சின்னதாக இருக்கும் எனவும், வயதான காரணத்தினால் ரெஸ்ட் எடுக்க வேண்டும் எனவும் சதீஷ் கூறியிருந்த நிலையில் பலரும் பாக்கியலட்சுமி சீரியலில் இதற்கு மேல் கோபி இல்லை என கூறிவந்தனர்.
எனவே இதனால் கடுப்பான சதீஷ் சமீபத்தில் மேலும் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்திருப்பதால் அனைவரும் இந்த சீரியலுக்கு எப்பொழுதும் போல ஆதரவு கொடுக்க வேண்டும் என கூறினேன் மேலும் இதற்கு மேல் என்னுடைய கேரக்டர் கொஞ்சமாக இருக்கும் என்றுதான் சொன்னேன்.
ஆனால் அனைவரும் இதற்கு மேல் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கிடையாது என கூறி வருகிறார்கள் இது தலைவலியாக இருக்கிறது. நான் பாக்கியலட்சுமி சீரியலில் இருக்கிறேன் இத்தனை நாட்களாக என்னுடைய கேரக்டரை மட்டுமே அதிக அளவில் பார்த்து வந்தீர்கள் ஆனால் அது குறையும் என்று தான் நான் கூறினேன் என விளக்கம் அளித்துள்ளார் சதீஷ்.