தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னாட்களில் ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தார் சசிக்குமார். இவரது நடிப்பு எதார்த்தமாக இருந்ததால் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகத் தொடங்கியது. இயக்குனராக இருந்ததால் படத்தின் கதையை நன்கு அறிந்து அதற்கு ஏற்றவாறு நடிக்கும் தன்மை சசிகுமார் பெற்றிருந்தார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நாடோடிகள் 2 ஓரளவு நல்லதொரு வெற்றியை பெற்றது அதை தொடர்ந்து எம்ஜிஆர் மகன் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
ஆனால் இதுவரையிலும் படம் வெளிவராமல் இருந்து வருகிறது இந்த நிலையில் இயக்குனரும், நடிகருமான சசிகுமார் அறிமுக இயக்குனர் எம். ஹேம்நாத் இயக்கும் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். மேலும் இந்த திரைப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ் லக்ஷ்மன் குமார் புரோடக்சன் தயாரிக்கிறது. ஆனால் இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை இப்படி இருக்க இந்த படத்தின் பாடல் பதிவுடன் இன்று பூஜை போடப்பட்டது.
படத்தில் இவரை தவிர வேறு எந்த ஒரு நடிகையையும் நடிகைகளையும் படக்குழு கமீட் செய்யவில்லை. ஆனால் விரைவில் அறிவிக்கும் என கூறப்படுகிறது. இதோ பூஜை போடப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
