சார்பட்டா 2 – வுக்காக வெறித்தனமாக உடலை ஏற்றிய ஆர்யா… வைரலாகும் வீடியோ..

sarpatta parambarai 2 : தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி இயக்குனர் என்று அந்தஸ்தில் இருப்பவர் பா. ரஞ்சித் இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது இந்த நிலையில் இவர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் தான் சார்பட்டா பரம்பரை இந்த திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகாமல் OTT இணையதளத்தில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் இந்த இரண்டாவது பாகத்திலும் ஆர்யா தான் கதா நாயகனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியது. அதனால் ஆர்யா சார்பட்டா பரம்பரை இரண்டாவது பாகத்திற்காக கடுமையான உடற்பயிற்சியை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

கதை கேட்காமலேயே விஜயகாந்த் நடித்த திரைப்படம்.. குழந்தை மாதிரி அடம் பிடிப்பார் – ரகசியத்தை உடைக்கும் இயக்குனர்

அப்படி இருக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டை சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் மக்கள் என அனைவரும் கோலாகலமாக கொண்டாடி வந்தார்கள் இந்த நிலையில் 2024 எனக்கு மிகவும் கடினமான பணி ஆண்டாக இருக்கப் போகிறது மிஸ்டர், சார்ப்பட்டா 2, ஆர்யா 37, என எனக்கு மிகவும் பிடித்தமான உடற்பயிற்சியின் மூலம் இந்த ஆண்டு துவங்குகிறேன் இந்த ஆண்டு அனைவருக்கும் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும் எனக்கூறி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே ஆர்யா நடிப்பில் வெளியாகிய திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பு பெறாத நிலையில் கண்டிப்பாக இந்த திரைப்படங்கள் மூலம் மீண்டும் ஒரு ஹிட் கொடுக்க காத்துக் கொண்டிருக்கிறார் அதனால் தான் உடலை மெருகேற்றி படங்களில் நடித்து வருகிறார் கண்டிப்பாக இந்த மூன்று திரைப்படமும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார் ஆர்யா.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்