முதல் நாள் வசூலில் லியோவை தலையில் தட்டி ஓட விட்ட சலார்… எவ்வளவு வசூல் தெரியுமா..

salaar : இயக்குனர் பிரசாந்த் நீள் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் சலார் இந்த திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தில் நடித்து இந்திய அளவில் பேசப்படும் நடிகராக மாறினார். அதுமட்டுமில்லாமல் இவர் திரைப்படம் வெற்றி பெற்றதால் இவருக்கு   வரவேற்பு கிடைத்தது.

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடித்த சகோ, ஆதிபுருஷ் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதால் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் இடத்தில் இருந்தார் பிரபாஸ். இந்த நிலையில் பான் இந்தியா திரைப்படமாக சலார் திரைப்படம் உருவாகியது.

இந்த ஆண்டில் Youtube – ல் டாப் 10 இடத்தை பிடித்த பாடல்கள்.. ஆதிக்கம் செலுத்திய விஜய்

இந்த திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 178.7 கோடி வசூல் செய்திருப்பதாக படத்தில் முக்கிய இடத்தில் நடித்த பிரித்திவிராஜ் அறிவித்துள்ளார். இதன் மூலம் 2023 ஆம் ஆண்டு வெளியாகிய அனைத்து திரைப்படங்களை விடவும் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக சலார் மாறி உள்ளது.

ஏற்கனவே தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்தபடி முதல் நாள் வசூலில் விஜயின் லியோ 148.5 கோடியும் பிரபாஸின் ஆதி புரூஸ் 136.8 கோடியும் ஷாருக்கானின் ஜவான் 129.6 கோடியும் பாதான் 104 கோடியும் ரன்பீர் கபூரின் அனிமல் 115.9 கோடியும் முதல் நாள் வசூல் செய்திருந்தது இந்த நிலையில் முதல் நாள் வசூலில் அனைத்து படங்களை விடவும் சலார் அதிக வசூல் பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்த ஹீரோயின்.. நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய வாரிசு நடிகை.!

இதில் பெரும்பாலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தான் அதிக வசூல் செய்துள்ளது அதாவது 70 கோடி வசூல் செய்துள்ளது மேலும் கர்நாடகாவில் 12 கோடியும் கேரளாவில் 5 கோடியும் இந்த திரைப்படம் வசூல் செய்துள்ளது பிரபாஸ் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடித்த மூன்று திரைப்படங்களும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் சலார் திரைப்படம் முதல் நாள் வசூல் ஒட்டுமொத்த இந்திய திரை உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Exit mobile version