இந்த ஆண்டில் Youtube – ல் டாப் 10 இடத்தை பிடித்த பாடல்கள்.. ஆதிக்கம் செலுத்திய விஜய்

2023 – ல் எப்படி படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றதோ அதேபோல பல்வேறு பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அப்படி இந்தாண்டில் வெளிவந்த பாடல்களில் youtube – ல் அதிக பார்வையாளர்களை பெற்ற டாப் 10 பாடல்களைப் பற்றி பார்ப்போம்..

1. வாரிசு – ரஞ்சிதமே : விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இந்த ஆண்டு ஆரம்பத்தில் பொங்கலை முன்னிட்டு வெளிவந்த வாரிசு திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த ரஞ்சிதமே பாடலை விவேக் எழுத தமன் இசை அமைத்திருந்தார். இந்த பாடலை விஜய் மற்றும் மானசி பாடி அசத்தி இருந்தனர் இந்த பாடல் youtube-பில் வெளியாகி லிரிக் வீடியோ 224 மில்லியன், முழு பாடல் வீடியோ 148 மில்லியன் என மொத்தம் 372 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்த ஹீரோயின்.. நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய வாரிசு நடிகை.!

2. ஜெயிலர் – காவாலய்யா : சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலை அருண் ராஜா காமராஜ் எழுத அனிருத் இசையில் ஷில்பா ராவ், அனிருத் பாடியுள்ளனர். இந்த பாடலில் தமன்னா கிளாமர் நடனமாடி இருப்பார் அங்கங்கே சில வினாடிகள் மட்டும் ரஜினி வந்து போயிருப்பார்.. இந்த பாடல் youtubeபில் லிரிக் வீடியோ 228 மில்லியன், முழு பாடல் வீடியோ 138 மில்லியன் என மொத்தம் 366 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

3. லியோ – நா ரெடி தான் : கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த இந்தப் படத்தின் பாடலுக்கு அனிருத் இசை அமைக்க விஜய் மற்றும் அனிருத் சேர்ந்து பாடி இருந்தனர். இந்த பாடல் youtube-ல் லிரிக் வீடியோ 202 மில்லியன், முழு பாடல் 37 மில்லியன் என மொத்தம் 239 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.

ஆளவந்தான் படத்தில் கமலுக்கு டூப் போட்டது இவர்தான்.. 22 வருடங்கள் கழித்து வெளியான ரகசியம்

4. வாரிசு – ஜிமிக்கி பொண்ணு : விஜயின் வாரிசு படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடல் youtubeபில் முழு பாடல் வீடியோ 94 மில்லியன் + 39 மில்லியன், 2 நிமிட பாடல் காட்சி 39 மில்லியன், ஆடியோ 13 மில்லியன் என மொத்தம் 185 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

5. வாத்தி – வா வாத்தி : ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷ் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் youtube-ல் லிரிக் வீடியோ 31 மில்லியன், முழு பாடல் 135 மில்லியன் என மொத்தம் 166 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

6. ஜெயிலர் – ஹுக்கும் : ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்து பாடியிருப்பார்.. இந்த பாடல் யூடியூபில் லிரிக் வீடியோ 11 மில்லியன், முழு பாடல் வீடியோ 111 மில்லியன் என மொத்தம் 122 பார்வையாளர்களை கடந்துள்ளது.

7. வாரிசு – தீ தளபதி : தமன் இசையில் சிலம்பரசன் பாடிய இந்த பாடல் youtube-ல் சிலம்பரசன் வீடியோ 114 மில்லியன், முழு பாடல் வீடியோ 7 மில்லியன் என மொத்தம் 121 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

8. விடுதலை பார்ட் 1 : காட்டு மல்லி : இளையராஜா எழுதி அவரே இசை அமைத்து பாடிய இந்த பாடல் youtubeல் லிரிக் வீடியோ 30 மில்லியன், முழு பாடல் வீடியோ 72 மில்லியன் என மொத்தம் 102 மில்லியன் பார்வையாளர்களை  பெற்றுள்ளது.

9. துணிவு – சில்லா சில்லா : ஜிப்ரான் இசையில் அனிருத் பாடிய இந்த பாடல் youtube-ல் லிரிக் வீடியோ 60 மில்லியன் முழு பாடல் 31 மில்லியன் என மொத்தம் 91 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

10. லியோ – படாஸ் : அனிருத் இசையமைத்து பாடிய இந்த பாடலின் லிரிக் வீடியோ 64 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பத்தாவது இடத்தை பிடித்துள்ளது..

Exit mobile version