கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் வசூல் வேட்டையாடும் சலார்.. 2 நாள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Salaar Movie 2nd collection : இயக்குனர் பிரசாந்த் நீல் வித்தியாசமான படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார் கடைசியாக எடுத்த கேஜிஎப் சாப்டர் 1,  கே ஜி எஃப்  2 படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து  டாப் நடிகர் பிரபாஸை வைத்து “சலார்” என்னும் படத்தை எடுத்தார்.

இந்த படம் கே ஜி எஃப் படம் போன்று இருக்கும் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் இந்த படத்தை போட்டி போட்டுக் கொண்டு பார்த்தனர் ஆனால் படம் அந்த அளவிற்கு இல்லை என்றாலும் படத்தில் பிரபாஸ், பிருத்திவிராஜ் போன்றவர்கள் நடிப்பு மிரட்டலாக இருக்கிறது.

Bigg Boss 7: டைட்டில் வின்னர் இவர் தான்.. கணித்த ரசிகர்கள்.. சூப்பர் அப்டேட்

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மற்றும் இன்டர்வல் வெறித்தனம் சண்டை காட்சிகள் ஒவ்வொன்னிலும் மிரட்டி இருக்கிறார்கள். சலார் கன்னடம், ஆந்திரா, தெலுங்கானா போன்ற இடங்களில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது ஆனால் தமிழகத்தில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை..

மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் சலார் படம் வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை முதல் நாளில் 150 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது இரண்டாவது நாளிலும் வசூலில் பெரிய மாற்றங்கள் இல்லை..  இதுவரை 250 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது.

2023 Tamil Movies: 254 படங்கள் வெளியானது.. ஆனால் 9% மட்டுமே லாபம்.! மாஸ் காட்டிய 5 நடிகர்கள்

வருகின்ற நாட்கள் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது இப்படியே போகும் பட்சத்தில் இந்த ஆண்டில் வெளியான ஜெயிலர், லியோ ஆகிய படங்களின் வசூலை ஈசியாக முறியடித்து விடும் என பலரும் கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும்..