Bigg Boss 7: டைட்டில் வின்னர் இவர் தான்.. கணித்த ரசிகர்கள்.. சூப்பர் அப்டேட்

Bigg Boss 7 title winner: விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி 7வது சீசன் 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு 80 நாட்களைக் கடந்தும் இதுவரையிலும் யார் இந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்பதை கணிக்க முடியவில்லை ஒவ்வொரு வாரமும் ஏராளமான சண்டை சச்சரவுகள் பிக் பாஸ் வீட்டிற்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

எனவே ஏதாவது ஒரு சர்ச்சையில் போட்டியாளர்கள் சிக்கிக் கொள்வதனை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் இவர்கள் மூவருக்கும் தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்பொழுது இவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தாலும் ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டு தங்களது பெயரை கெடுத்துக் கொள்கின்றனர். இந்நிலையில் இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

எங்க அம்மாவுக்கு மட்டுமில்ல எனக்கு உன்னை பிடிக்கல.. மகாவை அடித்து துரத்திய சூர்யா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

அதாவது முதல் சீசனில் வெற்றி பெற்ற ஆரவ் இவருடைய முதல் எழுத்து ஆங்கிலத்தில் A-ல் தொடங்குகின்றது, இரண்டாவது சீசன் வெற்றியாளர் ரித்திகா இவருடைய பெயர் R-ல் ஆரம்பிக்கிறது, இவரை தொடர்ந்து மூன்றாவது சீசனின் வின்னர் முகேன் இவருடைய பெயரின் முதல் எழுத்து M.

நான்காவது சீசன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆர்யா அர்ஜுனன் பெயரின் முதல் எழுத்து A. ஐந்தாவது சீசனில் ராஜு இவருடைய பெயரின் முதல் எழுத்து R. மேலும் ஆறாவது சீசனில் வெற்றினை பெற்ற அசிம் பெயரின் முதல் எழுத்து A.

எங்க அம்மாவுக்கு மட்டுமில்ல எனக்கு உன்னை பிடிக்கல.. மகாவை அடித்து துரத்திய சூர்யா – ஆஹா கல்யாணம் ப்ரோமோ

இவ்வாறு இதனை எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது இதுவரையிலும் நடைபெற்ற பிக் பாஸ் சீசன்களில் A R M A R M என்னும் எழுத்தில் தொடங்கும் போட்டியாளர்கள் தான் வெற்றி பெற்று இருக்கின்றனர். எனவே இந்த சீசனில் அர்ச்சனா தான் கண்டிப்பாக டைட்டில் வின்னர் என கூறப்படுகிறது.