முக்கிய இடத்தில் பாகுபலி 2 சாதனையை முறியடித்த சலார்.. தொடரும் வசூல் வேட்டை

Salaar Movie : நடிகர் பிரபாஸ் சமீப காலமாக வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் கே ஜி எஃப், கே ஜி எஃப் 2 போன்ற படங்களை எடுத்து வெற்றி கண்ட பிரசாந்த் நில் உடன் கைகோர்த்து சலார் படத்தில் நடித்தார். பிரபாஸ் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி, பிருத்திவிராஜ், சுகுமாரன், ஈஸ்வரி ராவ், சுருதிஹாசன், ஸ்ரேயா ரெட்டி, சரண்..

சக்தி ஜெகபதிபாபு மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.  படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகியிருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.

சிறகடிக்க ஆசை சீரியல் வில்லி விஜயாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.?

முதல் நாளே மிகப் பெரிய வசூலை அள்ளி குவித்த நிலையில் அடுத்தடுத்த நாள்களிலும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால் தமிழ்நாடு கேரளா போன்ற இடங்களில் சலார் படம் எடுபடவில்லை ஆனால் வட மாநிலங்கள் ஆந்திரா தெலுங்கானா போன்ற இடங்களில் வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது.

இப்படி இருக்கின்ற நிலையில் பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை முறையடித்திருக்கிறது பிரபாஸின் சலார். ஆந்திராவில் உள்ள நிஜாம் ஏரியாவில் மட்டும் சலார் திரைபடத்திற்கு 73 கோடிக்கு மேல் ஷேர் கிடைத்துள்ளதாம் இதற்கு முன்பு பாகுபலி 2 திரைப்படம் 73 கோடி ஷேர் தொகையை குவித்தது.

அப்பா மனதை ரொம்பவும் காயப்படுத்தியது இதுதான்.. உண்மையை பகிர்ந்த சண்முக பாண்டியன்

இந்த சாதனை தற்பொழுது பகிரப்பட்டு வந்த நிலையில் அதையும் முறியடித்து முந்தி உள்ளது சலார் திரைப்படம். இதன் மூலம் மீண்டும் பாக்ஸ் ஆபீஸ் நாயகனாக பிரபாஸ் உருவெடுத்து இருக்கிறார். இது வரை ஒட்டுமொத்தமாக சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.