தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடல் அழகியாக வலம் வந்தவர் சாக்ஷி அகர்வால் இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து விட்டார்.
மேலும் சாக்ஷி அகர்வால் 2013ஆம் ஆண்டு வெளியாகிய ராஜா ராணி என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து யோகன், திருட்டு விசிடி, அத்யன் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் அது மட்டுமில்லாமல் கககபோ, காலா, விசுவாசம் குட்டி ஸ்டோரி என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் கடைசியாக இவர் ஆர்யா நடிப்பில் வெளியாகிய டெடி என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் அமைந்து கொண்டே இருக்கின்றன அந்த வகையில் தற்போது இவர் கையில் அரண்மனை 3, சின்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், பஹீரா, புருவி,120 ஹவர்ஸ் என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். சாக்ஷி அகர்வால் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். இவர் சன் தொலைக்காட்சியில் சொப்பனசுந்தரி என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுள்ளார்.
அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வரும் இவர் தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் பழைய டிவியை வைத்துக்கொண்டு தன்னுடைய கட்டழகு தெரியும்படி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.