ரீ ரிலீசான முத்து – ஆளவந்தான்.. வசூலில் முந்தியது யார் தெரியுமா.?

Muthu – Aalavandhan : தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 100 படங்கள் வெளி வருகின்றன இருந்தாலும் தமிழில் சூப்பர் ஹிட் அடித்த சில படங்கள் ரீ ரிலீஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்து ஓடுகிறது அந்த வகையில் ரஜினியின் முத்து – கமலஹாசனின் ஆளவந்தான் படங்கள் ஒரே நாளில் மறு வெளியீடு செய்யப்பட்டு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி, மீனா, சரத் பாபு, செந்தில், வடிவேலு, பொன்னம்பலம் என பலர் நடித்த திரைப்படம் முத்து படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடி வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படம் வெளியாகி 28 வருடங்கள் ஆன பிறகு கடந்த 8 ஆம் தேதி  ஃப்ரீ ரிலீஸ் ஆனது.

ஜல்சா பண்ண ஒரு லட்சம் கொடுத்தியே மறந்திட்டியா.. நீ எல்லாம் என்னை பத்தி பேசலாமா.! பிரபல நடிகரின் வண்டவாளத்தை தோலுரித்துக் காட்டிய பிரபலம்.!

மக்கள் மன்றம் ரசிகர்கள் படத்தை போட்டி போட்டுக் கொண்டு பார்த்து வருகின்றனர் இந்த படத்தை தொடர்ந்து ரஜினியின் படையப்பா படம் ஒன்றில் ரிலீஸ் செய்யப்படும் என கூறியிருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் ஆளவந்தான் படத்தில் கமல் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

குறிப்பாக வில்லன் கதாபாத்திரத்தில் முரட்டுத்தனமாக நடித்திருப்பார் மேலும் சிரிக்கவும் செய்திருப்பார். அதனால் இந்த படம் அப்பொழுது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றாலும் மக்கள் இதை கொண்டாட தவற விட்டனர் பல வருடங்கள் கழித்து கடந்த எட்டாம் தேதி ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது. இரண்டு படங்களையும் மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பார்த்து வருகின்றனர்.

ரஜினி மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போது வாயா.. போயா.. என கூப்பிட்ட கவுண்டமணி.. சூப்பர் ஸ்டார் கொடுத்த பதிலடி

அதனால் வசூல் அள்ளி வருகிறது. கமலின் ஆளவந்தான் திரைப்படம் தமிழகத்தில் 15 லட்சம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது ரஜினியின் முத்து திரைப்படம் அதில் பாதி 7 லட்சம் வசூலித்து இருபத்தாக தகவல்கள் வெளி வருகின்றன. வருகின்ற நாட்களில் ஆளவந்தான் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.