நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழித் திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகருக்கான அந்தஸ்தை அடைந்தவர் இவர் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளியாகிய சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதேபோல் இதற்கு முன் தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர்.
சமூக வளைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபகாலமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை தவறாமல் பதிவிட்டு வருகிறார். மேலும் ராஷ்மிகா மந்தனா கடைசியாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
இந்தத் திரைப்படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது அதனால் ராஷ்மிகாவின் புகழ் பரவியது, புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சாமி சாமி பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆட்டம் காண வைத்தார். அந்த அளவு அந்தப் பாடலில் கிளாமராக நடித்து இருந்தார்.
மேலும் புஷ்பா திரைப்படத்தில் ரஷ்மிகாவின் நடிப்பு அனைவராலும் ரசிக்கப்பட்டது இந்த நிலையில் புஷ்பா இரண்டாவது பாகம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்கள். இந்த நிலையில் ராஷ்மிகா தற்பொழுது தளபதி அறுபத்தி ஆறு திரைப்படத்தில் இணைந்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது அந்த பட பூஜை விழாவில் ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டார்.
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் நீச்சல் குளத்தில் மீனைப் போல் நீந்துகிறார் தனது சுட்டித்தனமான விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளார் அதுமட்டுமில்லாமல் நான் ஒரு நீர் குழந்தை எனக்கு என் நீச்சல் நேரம் மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார் இதோ அந்த வீடியோ.