நீங்க செதுக்கி வச்ச சிலை மாதிரி இருக்க காரணம் இவங்க தானா.. வைரலாகும் ராஷ்மிகா அம்மாவின் புகைப்படம்.!

Rashmika mandanna : நடிகை ராஸ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் இவர் தமிழில் முதன் முதலாக கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இப்படி முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது தனுஷ் திரைப்படமான டி51 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். மேலும் இவர் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படும் நடிகைகளில் ஒருவர்.

காசு, பணம் சேர்த்து வைக்கிறதெல்லாம் ஓல்டு மாடல்.. வீடு முழுக்க கார்களை குவித்து வைத்திருக்கும் ராஷ்மிகா மந்தனா

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் பல நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கமான சமூக வலைதளத்தில் 39 மில்லியன் பாலோயர்ஸ் வைத்துள்ளார். அப்படி சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் போட்டு வருவார்கள்.

rashmika manthana

இந்த நிலையில் ராஷ்மிகா  தன்னுடைய அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்க ஏன் இவ்ளோ அழகா இருக்கீங்கன்னு இப்பதான் தெரியுது உங்க அம்மா ஹீரோயின் மாதிரி இருக்காங்க அதனால தான் நீங்களும் அழகா இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

விட்ட குறை தொட்ட குறை விடாது கருப்பு போல் ராஷ்மிகாவின் முன்னாள் காதலர்..! அடங்கொப்புரானா என்ன இப்படி சொல்லிட்ட…

rashmika manthana

இந்த புகைப்படத்தை வெளியிட்ட சில மணி நேரத்திலேயே சுமார் 12 லட்சம் லைக் குவிந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் தாறுமாறான கமெண்ட்களும் பதிவாகி வருகிறது. மேலும் ஒரு சில ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவின் அம்மாவின் புகைப்படத்தை பார்த்து நீங்களும் ஹீரோயினாக நடிக்கலாமே என கமெண்ட் செய்து வருகிறார்கள்,.

rashmika manthana
Exit mobile version