புஷ்பா திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் தடபுடலாக தனது சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா மந்தனா – திக்குமுக்காடும் தென்னிந்திய சினிமா.!

rashmika-mandanna
rashmika-mandanna

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். இப்பொழுது டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து வருவதால் இவரது பெயர் தற்போது தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது போதாத குறைக்கு இந்தியிலும் இவர் கால்தடம் பதித்து வருகிறார்.

அண்மையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அசத்தினார் பெரும்பாலும் கிளாமர் காட்டி நடிக்க மாட்டார் ஆனால் புஷ்பா திரைப்படம் முழுவதும் சற்று கிளாமராக நடித்து அசத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

புஷ்பா திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களிடம் கதை கேட்டு அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் போட்டோ ஷூட் நடத்திய அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசத்தி வருகிறார் இதனால் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் உயர்ந்து கொண்டே இருக்கின்றன.

இப்படியிருக்க புஷ்பா திரைப்படத்திற்கு பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா பல படங்களில் கமிட்டாகி வருகிறார் அதில் ஒரு படத்தில் சுமார் அரை மணி நேரம் வந்துபோக ஒரு கோடி சம்பளம் கேட்டு உள்ளாராம். இதனால் நடிகை ராஷ்மிகா மந்தனா முழுநேர படங்களில் நடிப்பதற்கு சம்பளத்தை முன்பை விட இப்பொழுது உயர்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ராஷ்மிகா மந்தனா போலவே நடிகை பூஜா ஹெக்டே இதுவரை 3 கோடி சம்பளம் வாங்கி வந்த நிலையில் இப்போது 2 கோடி சம்பளம் உயர்த்தி இனி அடுத்தடுத்த படங்களில் 5 கோடி சம்பளம் வாங்க கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.