சூப்பர் ஸ்டாருக்கு தண்ணி காட்டிய ராமராஜன்.. நேருக்கு நேர் மோதியதில் ஜெயித்தது யார் தெரியுமா.?

Rajini Vs Ramarajan : 80 காலகட்டங்களில் தவிர்க்க முடியாத ஹீரோக்கள் ரஜினி, கமல் இவர்கள் இருவரது படங்களும் அப்பொழுது வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் இவர்களுக்கு இணையாக அப்பொழுது பேசப்பட்டவர் தான் ராமராஜன் குறிப்பாக ரஜினி உடன் பல தடவை மோதி இருக்கிறார். இவர்கள் இருவரும்  நேருக்கு நேர் மோதிய படங்கள் குறித்து இங்கு விலாவாரியாக பார்ப்போம்..

மாவீரன் –  நம்ம ஊரு நல்ல ஊரு : 1986 ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ரஜினியின் மாவீரன் படமும், ராமராஜனின் நம்ம ஊரு நல்ல ஊரு படமும் நேருக்கு நேர் மோதியது இதில்  ராமராஜன் வெற்றி பெற்றார். 1987 – ல் ரஜினியின் வேலைக்காரன் படமும்,  எங்க ஊரு பாட்டுக்காரன் படமும் ரிலீசானது. இதில் ராமராஜன் படம் ஹிட் அடித்தது.

கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ்.. லிஸ்டில் இணைந்த சுருதிஹாசன் வெளியான அறிவிப்பால் குழப்பத்தில் ரசிகர்கள்…

1987 ஜூலையில் ராமராஜன் ஒன்று எங்கள் ஜாதியே படமும், ரஜினியின் ஊர்காவலன் படமும் மோதியது. இதில் இரண்டு படமும் சுமாராக ஓடியது. 1988 மார்ச்சில் ரஜினியின் குரு சிஷ்யன் படமும், ராமராஜன் நடித்த ராசாவே உன்னை நம்பி படமும் நேருக்கு நேர் மோதியது இதில் குரு சிஷ்யன் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வெள்ளி விழா கண்டது.

1988 ஆகஸ்டில் ராமராஜன் நடித்த எங்க ஊரு காவல்காரன் படமும், அடுத்த மாதமே ரஜினியின் தர்மத்தின் தலைவன் படமும் வெளியானது இதில் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. 1988 தீபாவளியை முன்னிட்டு ரஜினியின் கொடி பறக்குது படமும், ராமராஜனின் நம்ம ஊரு நாயகன் படமும் வெளியானது இதில் ராமராஜன் வெற்றி பெற்றார்.

நடிப்பதை தாண்டி படத்தை தயாரித்து கல்லாபட்டியை நிரப்பிக்கொண்ட ராஜ்கிரண்.! மாஸ் காட்டிய 5 திரைப்படங்கள்.

1991 ஆம் ஆண்டு தீபாவளி முன்னிட்டு ரஜினியின் தளபதி படமும், ராமராஜனின் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு படமும் வெளியானது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. 1992 ஜூனில் ரஜினியின் அண்ணாமலை படமும், ராமராஜனின் பொண்ணுக்கு ஏத்த புருஷன் படமும், வெளியானது இதில் ரஜினி படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.