நீ தான் எனக்கு வேணும்.? மீனாவை 6 வருடமாக துரத்திய ராஜ்கிரண்.. பிரச்சனையை முடித்து வந்த நடிகையின் அம்மா

meena
meena

meena : தற்போது சினிமாவில் நுழைய மிக முக்கியமானது அழகு என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அதுயெல்லாம் கிடையாது என ஒரு கட்டத்தில் புரிய வைத்தவர் ராஜ்கிரண்.  இவர் 40 வயதில் தான் ஹீரோவாகவே ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது அப்படி இவர் முதலில் நடித்த திரைப்படம் “என் ராசாவின் மனசிலே”..

படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மீனா. அதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டிருந்த மீனா தமிழில் முதல் முறையாக ஹீரோயின்னாக நடித்த திரைப்படம் இதுதான். இந்த படத்தில் அவரை கமிட் செய்ய முக்கிய காரணம் தெலுங்கில் இவர் ஹீரோயின்னாக நடித்த கதாபாத்திரத்தை பார்த்து வியந்து போன ராஜ்கிரண்..

தன்னுடைய என் ராசாவின் மனசிலே படத்தில் இவர் ஹீரோயின்னாக நடித்தால் நிச்சயம் வெற்றி பெறும் என கருதி அவர் படத்தில் ஹீரோயினாக போட்டார் என் ராசாவின் மனசிலே படம் வெளிவந்து வெள்ளி விழா கண்டது. இதனால் சந்தோஷம் அடைந்த ராஜ்கிரன் அடுத்தடுத்து தான் தயாரிக்க இருக்கும் படங்களில் மீனாவை நடிக்க வைத்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எண்ணினார்.

இதனால் மீனாவிடம் தொடர்ந்து அடுத்தடுத்த கதைகளை சொல்ல ராஜ்கிரண் முயற்சித்தார் ஆனால் மீனா அதற்கு எதிர்க்கும் பிடி கொடுக்காமல் கைநழுவி போய் மற்ற முன்னணி நடிகரின் படங்களில் ஜோடி போட்டு நடித்து மிகக் குறுகிய காலத்திலேயே டாப் நடிகை என்ற அந்தஸ்தை மீனா பிடித்துக் கொண்டார் ஒரு கட்டத்தில் ராஜ்கிரண் மீனாவை சந்திக்கவே முடியவில்லை இதனால் அவருடைய அம்மாவிடம் சென்று மீனா தன்னுடைய படத்தில் நடிக்க வேண்டும் என வாய்ப்பு கேட்டார்.

முதல் வாய்ப்பு கொடுத்த உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி அனுப்பினாராம் அதன்படி ஆறு வருடங்கள் கழித்து இருவரும் இணைந்து “பாசமுள்ள பாண்டியரே” படத்தில் நடித்திருந்தனர் இதனை சமீபத்தில் நடைபெற்ற மீனா 40 நிகழ்ச்சிகள் ராஜ்கிரண் கூறினார் மேலும் பேசிய அவர் முதல் படத்தில் நடிக்கும் போது மீனா ஷூட்டிங் முடியும் வரை என்னிடம் அவர் பேசவே இல்லை அவருடைய அம்மா எவ்வளவு சொல்லியும் தன்னிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை பயத்திலேயே இருந்தார் என கூறினார்.