10 வருடத்தில் ஒரு படம் கூட ஹிட் இல்லை.. முன்னணி நடிகர் என்று கூட பார்க்காமல் பங்கமாய் கலாய்த்த ரஜினி…

Actor Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியா ரோலில் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படம் வருகின்ற 9ம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் நடைபெற்றது. அப்பொழுது ரஜினிகாந்த் பேசிய பொழுது டாப் ஹீரோ ஒருவரை பங்கமாக கலாய்த்துள்ளார். அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில ஆண்டுகளாக வெளியாகும் திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் இவர் அவ்வளவுதான் என பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

நடிகர் ஜெய் நிராகரித்த நான்கு பிளாக்பஸ்டர் திரைப்படம் எது தெரியுமா.?

இவரைப் போலவே பீஸ்ட் படத்தின்  மூலம் நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்து ட்ரோல்களுக்கு உள்ளான நெல்சனுக்கும் கம்பேக் படமாக ஜெயிலர் அமைந்தது. தற்பொழுது ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் வருகிறார். இதற்கு முன்னாக தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் கேமியா ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க படம் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக படக்குழுவினர்கள் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கடந்த மாதம் தனியார் கல்லூரி ஒன்றில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

முன்பணம் கொடுப்பதற்கு முன்பே அட்ஜஸ்ட்மென்ட்.. கண்ணீர் விட்டு கதறும் இளம் நடிகை.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர் ரகுமான், லைகா சுபாஸ்கரன், ஐஸ்வர்யா ரஜினி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். இதில் பேசிய ரஜினி ஜெயிலர் வெளியானதும் அவரது நண்பரும் டாப் ஹீரோவுமான ஒருவர் படம் பார்க்க வேண்டும் என ரஜினியிடம் கேட்டிருந்தாராம். ரஜினியை அவன் இவன் என ஒருமையில் கூப்பிடும் அளவிற்கு நெருக்கமானவராம் அந்த ஹீரோவுக்கு ஜெயிலர் படத்தை தனியாக ஸ்கிரீன் செய்யப்பட்டுள்ளது.

அதனை பார்த்துவிட்டு ரஜினியிடம் பேசிய அந்த ஹீரோ 30% படம் சூப்பர்.. 70% வயிறெல்லாம் எரியுதுடா.. எப்படி உனக்கு மட்டும் இப்படி எல்லாம் டைரக்டர் கிடைக்கிறார்கள் நெல்சன் கிட்ட சொல்லி எனக்கு ஒரு படம் பண்ண சொல்லு அவருக்கு எவ்வளவு வேணாலும் சம்பளம் கொடுக்கிறேன் எனக் கேட்டாராம்.

அதனை கேட்டு ரஜினி, நெல்சன் அப்படியெல்லாம் படம் பண்ண மாட்டார் என்று சொல்லிட்டேன் அது மட்டும் இல்லாமல் அந்த ஹீரோவுக்கு பத்து வருஷத்துல ஒரு படம் கூட ஹிட்டாகல என பங்கமாக கலாய்த்து உள்ளார். இவ்வாறு பங்கமாக கலாய்த்த ரஜினி தெலுங்கு மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அல்லது மோகன் பாபு இருவரில் ஒருவராகத் தான் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.