நடிகர் ஜெய் நிராகரித்த நான்கு பிளாக்பஸ்டர் திரைப்படம் எது தெரியுமா.?

jai missed 4 movies : பொதுவாக நடிகர்கள் ஒரு சில திரைப்படங்களை ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தவிர்ப்பார்கள் ஆனால் அந்தக் கதையில் வேறொரு நடிகர் நடித்து மாபெரும் ஹிட் அடித்து இருக்கும் அப்படி நடிகர் ஜெய் நடிக்க மறுத்த நான்கு திரைப்படங்களில் லிஸ்டை இங்கே காணலாம்.

நாடோடிகள்: 2009 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் நாடோடிகள் இந்த திரைப்படத்தை சமுத்திரக்கனி அவர்கள் இயக்கியிருந்தார் அது மட்டும் இல்லாமல் படத்தில் சசிகுமார், அனன்யா, விஜய் வசந்த், பரணி, அபிநயா, கஞ்சா கருப்பு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜெய் தான் ஆனால் எந்த கதாபாத்திரம் என்று தெரியவில்லை. இதனை நடிகர் ஜெய் அவர்களே ஒரு பேட்டியில் சுப்பிரமணியபுரம் முடிந்தவுடன் நாடோடிகள் டேட் கிடைத்தது எனக் கூறியிருந்தார்.

சிவா மனசுல சக்தி: 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் சிவா மனசுல சக்தி இந்த திரைப்படத்தை எம். ராஜேஷ் அவர்கள் இயக்கியிருந்தார் படத்தில் ஜீவா, அனுயா பகவத், சந்தானம் ஆகியவர்கள் நடித்திருந்தார்கள் சந்தானத்தின் காமெடி இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜெய்தான் ஆனால் அந்த சமயத்தில் சுப்பிரமணியம் திரைப்படத்தில் நடிப்பதற்காக தாடி வைத்திருந்ததால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.

விண்ணைத்தாண்டி வருவாயா: 2010 பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா இந்த திரைப்படத்தில் சிம்பு, திரிஷா ஆகியவர்கள் நடித்திருந்தார்கள் காதலை மையமாக வைத்து வெளியாகிய இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது ஜெய் தான் ஆனால் இந்த திரைப்படத்தையும் ஜெய அவர்கள் ஏதோ ஒரு காரணம் சொல்லி ரிஜெக்ட் செய்துள்ளார்.

ராட்சசன் : ராம்குமார் இயக்கத்தில் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியாகிய திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், சரவணன் ஆகியவர்கள் நடித்திருந்தார்கள் ஆனால் இந்த திரைப்படத்தில் முதல் முதலில் நடிகர் ஜெய் அவர்கள்தான் நடிக்க வேண்டியது இதனையும் ஜெய் அவர்கள் நிராகரித்துள்ளார் இப்படி நான்கு மெகா ஹிட் திரைப்படத்தை நிராகரித்து ஆள் அட்ரஸ் இல்லாமல் தற்பொழுது நிற்கிறார் என்பது வருத்தத்துக்குரிய செய்திதான்.