இந்திய திரைப்பயணத்திலேயே இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை வாங்க போகும் ரஜினி.! ஆத்தாடி அதுக்குன்னு இத்தனை கோடி ஆய் பிளக்கும் கோலிவுட்…

jailer
jailer

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் ஆரம்ப காலகட்டத்தில் எப்படி நடித்தாரோ இன்று வரை அதை எனர்ஜியுடன் நடித்து வருகிறார் அதனால் தான் இவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம். இந்நிலையில் தற்பொழுது ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படம் ஒரு சில ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் அந்தப் பேச்சு ஜெய்லர்  திரைப்படத்தில் இருக்கக் கூடாது என சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டிரிக்ட்டாக கூறியுள்ளார் அதனால் இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார்.

தற்பொழுது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெய்லர் திரைப்படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது கிட்டத்தட்ட இறுதி கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அண்மை காலமாக ஜெயிலர் சூட்டிங் ஸ்பாட் தளத்திலிருந்து அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் கசிந்தவாறு இருக்கிறது  சமீபத்தில் கூட ரஜினியின் வீடியோ இணையதளத்தில் லீக் ஆனது.

ஜெயிலர் திரைப்படத்தின் சூட்டிங் கூட முடியவில்லை அதற்குள் ரஜினியின் அடுத்த பட தகவல்கள் இணையதளத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ரஜினியின் அடுத்த இரண்டு திரைப்படங்களையும் லைக்கான நிறுவனம் தான் தயாரிக்க போவதாகவும் அந்த திரைப்படங்கள் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

ரஜினியின் ஒரு திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் லைக்கா தயாரிப்பில் ரஜினி நடிக்கும் இரண்டு திரைப்படங்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் சம்பளமாக 250 கோடி பிளஸ் ஜிஎஸ்டி கேட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 300 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த இரண்டு திரைப்படங்களுக்கும்.

விரைவில் அடுத்த அடுத்த திரைப்படங்களின் அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.