வெறும் 25 நாள் நடித்து சூப்பர் ஹிட் படம் கொடுத்த ரஜினி.! யாராலும் மறக்க முடியாத படம்

Rajini : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் 70 வயதிலேயும் நல்ல நல்ல படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். கடைசியாக வெளியான ஜெயிலர் அதிரி புதிரி ஹிட் அடித்ததை தொடர்ந்து கைவசம் இரண்டு மூன்று படங்கள் வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட ரஜினி ஆரம்பத்தில் தொடர்ந்து வெற்றிகளையும் கொடுத்து வந்தார் அப்படி முரட்டுக்காளை படம் சூப்பர் டூப்பர்  ஹிட் அடிக்க அதன் பிறகு ரஜினிக்கு மேலும் வாய்ப்புகள் குவிந்தது. முரட்டுக்காளை கதை எழுதிய பஞ்ச அருணாச்சலத்திற்கு உதவ ரஜினி முன் வந்தார்.

கழட்டிவிட்ட அஜித், கமல் கணவருக்காக அடிமட்டமாக இறங்கிய நயன்தாரா.! வேலைக்கு ஆகுமா இந்த முயற்சி..

இயக்குனர் பி எஸ் முத்துராமனை அழைத்து 15 நாள் கால் ஷீட் தருகிறேன் படம் ஒன்றை எடுங்கள் கௌரவ வேடமாக இருந்தாலும் பரவாயில்லை எனக் கூறி இருக்கிறார். 15 நாள் பத்தாவது பத்து நாள் சேர்த்து 25 நாட்கள் தாருங்கள்.

ஒரு நல்ல படம் எடுக்கிறேன் என பி எஸ் முத்துராமன் கூற ரஜினி ஓகே சொன்னாராம் பஞ்சு அருணாச்சலம் கதை எழுதி, தயாரிக்க பி எஸ் முத்துராமன் இயக்க ரஜினி நடித்த திரைப்படம் தான் குரு சிஷ்யன். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து பிரபு, கௌதமி, வினி சக்கரவர்த்தி, சோ மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

சுயரூபத்தை காட்டிய காஜி தல.. அர்ச்சனாவுக்கு ஆதரவாக உரிமைக்குரல் கொடுக்கும் ரசிகர்கள்.! ஆண்டவரின் முடிவு என்ன?

படம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று அதிக நாட்கள் ஓடி வசூலில் சூப்பர் ஹிட் அடித்தது இந்த படத்தை தயாரித்த பஞ்சு அருணாச்சலத்திற்கு நல்ல கலெக்ஷன் ஆனது. அதன் பிறகு   இந்த மூவரும் இணைந்து அவ்வப்போது வெற்றி படங்களை கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.