சுயரூபத்தை காட்டிய காஜி தல.. அர்ச்சனாவுக்கு ஆதரவாக உரிமைக்குரல் கொடுக்கும் ரசிகர்கள்.! ஆண்டவரின் முடிவு என்ன?

Bigg Boss 7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆர்வமுடன் ரசிகர்கள் பார்த்து வரும் நிலையில் சமீப காலங்களாக மக்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக பலரும் சோசியல் மீடியாவில் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். தங்களுடைய டிஆர்பிக்காக விஜய் டிவி போட்டியாளர்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறது என்பதுதான் உண்மை.

ஏன் என்றால் நியாயத்திற்கு கை கொடுக்காமல் அநியாயத்திற்கு கைகொடுத்து வருகிறார்கள். முதற்கட்டமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை திட்டம் போட்டு வெளியேற்றினார்கள். இது மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது தற்போது வரையிலும் விஜய் டிவியை ரசிகர்கள் இதற்காக பங்கம் செய்து வருகிறார்கள்.

மேலும் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த அர்ச்சனாவையும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். இவ்வாறு ஒரு போட்டியாளரை டார்கெட் செய்து பலரும் இவ்வாறு செய்து வருவதனால் ரசிகர்கள் கடுப்பில் உள்ளனர். மேலும் கமல்ஹாசனை திட்டி தீர்த்து வருகிறார்கள் ப்ரோமோவில் மட்டும் பெரிய பில்டப் கொடுத்துவிட்டு ஆனால் எபிசோடில் ஒன்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் இன்று அர்ச்சனாவுக்கும் நிக்சனுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று உள்ளது. அதில் நிக்சன் ரவுடி போல படும் கேவலமாக திட்டுவதோடு மட்டுமல்லாமல் கொலை மிரட்டல் விடுத்தும் உள்ளார். எனவே இவ்வாறு நிக்சனின் கேவலமான செயலுக்காக ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்படுவாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். எனவே நிக்சனுக்கு கமலே ரெட் கார்ட் கொடுத்து அனுப்ப வேண்டும் ஏனென்றால் மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து தனது மொத்த சுய ரூபத்தையும் காட்டி உள்ளார் நிக்சன். எனவே இதற்காக ஆண்டவர் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என அர்ச்சனாவுக்கு ஆதரவாக உரிமைக்குரல் கொடுத்து வருகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்