தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக அடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். இதுவரை 168 திரைப்படங்களில் நடித்துள்ளார் இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஜெயில் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ரம்யா கிருஷ்ணன், கன்னட டாப் ஹீரோ சிவராஜ் குமார், விநாயகன், யோகி பாபு, மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது ரஜினி சினிமா உலகில் இப்பொழுது ஒரு படத்திற்கு சுமார் 100 கோடி கிட்டத்தட்ட சம்பளம் வாங்குகிறார் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில படங்களுக்காக சம்பளமே வாங்காமல் நடித்திருக்கிறார். அப்படி ஒரு சம்பவத்தை தான் தற்பொழுது நாம் பார்க்க இருக்கிறோம்.
ரஜினி ஆரம்ப காலகட்டத்தில் தண்டாயுதபாணி பிலிம் உடன் கைகோர்த்து பல படங்களில் ரஜினி நடித்தார். அந்த வகையில் அன்னை ஓர் ஆலயம், அன்பு நான் அடிமை, ரங்கா, தாய் வீடு என சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் தாய் வீடு படத்தின் பொழுது தயாரிப்பாளர் தியாகராஜன், ரஜினிக்கும் இடையில் கருத்து வேறுபாடு வர அதன் பின் ரஜினியை அவரது படங்களில் நடிக்கவில்லை அதன் பிறகு தண்டாயுதபாணி பிலிம்ஸ் தயாரித்த பல படங்கள் தோல்வி படங்களாக மாறின இதனால் அந்த நிறுவனம் ரொம்ப கஷ்டத்தை சந்தித்தது.
பிரச்சனை எல்லாம் மறந்து தயாரிப்பாளர் தியாகராஜன் ரஜினியின் இடம் சென்று எனக்கு ஒரு படம் பணி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார் அவரும் நடிக்க ஒப்புக்கொண்டார் 1978 ஹிந்தியில் வெளியான கஸ்மே வாடே படத்தை தழுவி தமிழில் எஸ் பி முத்துராமன் தர்மத்தின் தலைவன் படத்தை எடுத்தார் ரஜினி இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார். அவருடன் இணைந்து பிரபு, சுகாசினி மற்றும் குஸ்பு ஆகியோர்கள் நடித்தனர் இந்த படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இந்த படத்தில் நடித்த ரஜினியின் சம்பளத்தை கூட வாங்க வில்லையாம். கஷ்டத்தில் இருந்த தண்டாயுதபாணி பிலிம் ஓரளவு நஷ்டத்தில் இருந்து மீண்டது.