தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் அதுமட்டுமில்லாமல் ரஜினியுடன் நடிப்பதற்கு பல நடிகர் நடிகைகள் போட்டி போடுவார்கள்.அதேபோல் ரஜினியின் திரைப்படத்தை இயக்குவதற்காகவும் இயக்குனர்கள் போட்டி போடுவார்கள் இந்த நிலையில் சமீபகாலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது தலைவர் 169 திரைப்படம் உருவாக இருக்கிறது இந்த திரைப்படத்தை நெல்சன் டிலிப்குமர் தான் இயக்க இருக்கிறார் அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தான் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது என தகவல் வெளியானது.
அதுமட்டுமில்லாமல் தலைவர் 169 திரை படத்தில் சிவகார்த்திகேயன் பிரியங்கா அருள்மோகன், வடிவேலு, யோகிபாபு, ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள் எனவும் தகவல் வெளியான நிலையில் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை இருந்தாலும் கிட்டத்தட்ட உறுதியான தகவலாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினிக்கு வில்லியாக படையப்பா திரைப்படத்தில் நடித்த நீலாம்பரி என்ற ரம்யா கிருஷ்ணன் தலைவர் 169 திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக கோலிவுட்டில் பெரும் பரபரப்பாகப் பேசி வருகிறார்கள். ரம்யா கிர்ஷணன் ரஜினியுடன் படையப்பா திரைப்படத்தில் நடித்த காட்சிகளை நினைவுக்குக் கொண்டுவருகிறது அதுமட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
ஆனால் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருந்தாலும் நீலாம்பரி ரஜினி திரைப்படத்தில் இணைந்து விட்டால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.
