சில்க் ஸ்மிதாவாக மாறிய ரட்சிதா மகாலட்சுமி.! அடுக்கு மல்லிகை இது ஆல் புடிக்குது..

Rachitha Mahalakshmi new look photo viral: விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரச்சிதா மகாலட்சுமி தொடர்ந்து சின்ன திரையில் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையா என்று கேட்ட பொழுது ஒரு பேட்டியில் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

ஆனால் சீரியல்களில் கமிட்டாகி விட்டதால் படங்களில் நடிக்க முடியாமல் போய்விடுகிறது என தெரிவித்தார். பிறகு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் இந்நிகழ்ச்சியின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான ரச்சிதா தற்பொழுது எக்ஸ்ட்ரீம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இதற்கான படப்பிடிப்புகளும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்ணாமலைக்காக முத்து மீனா எடுத்த அதிரடி முடிவு.! மூக்கு உடைந்து நிற்கும் விஜயா…

ரச்சிதா மகாலட்சுமி பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலின் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். இந்த சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணமாகி சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இருவரும் சமீபத்தில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

Rachitha Mahalakshmi new look photo viral
Rachitha Mahalakshmi new look photo viral

கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் பிக் பாஸ் சீசன் 6 பங்குப் பெற்றார். இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்தது அதேபோல் இவரது கணவர் தினேஷ் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

Rachitha Mahalakshmi new look photo viral
Rachitha Mahalakshmi new look photo viral

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹீரோயினாக ரச்சிதா மகாலட்சுமி படங்களில் நடித்துவரும் நிலையில் எக்ஸ்ட்ரீம் படத்தில் இவருடன் இணைந்து அபி நட்சத்திரா, ஆனந்த் நாக், அமிர்தா ஷெல்டர் போன்றோர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.

Rachitha Mahalakshmi new look photo viral
Rachitha Mahalakshmi new look photo viral

இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சில்க் ஸ்மிதா மாதிரி இருப்பதாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Rachitha Mahalakshmi new look photo viral
Rachitha Mahalakshmi new look photo viral
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்