லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சினிமா உலகில் தனது பயணத்தை தொடர்ந்த நாளிலிருந்து இப்போதுவரையிலும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருவதால் அவரது சினிமா வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
சினிமா உலகில் முக்கியத்துவம் உள்ள ஒரு சில கதைகள் வரும் பட்சத்தில் அதில் சோலோவாக நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார் அந்த படங்களும் இவருக்கு வெற்றியை பெறுகின்றன. தமிழில் எப்படி ரஜினியை தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள அதேபோல நயன்தாராவும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று சினிமாவுலகில் ஓடிக் கொண்டிருக்கிறார்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடைசியாக தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாக சாதனை படைத்தது அதனை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
கனெக்ட், O2 மற்றும் ஷாருக்கானுடன் இணைந்து ஒரு படம் பண்ணி வருகிறார் இதில் முதலாவதாக O2 திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த படம் திரையரங்கில் வெளியாகவில்லை என்றாலும் OTT தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர் படமாக அமைந்து உள்ளதால் விருவிருப்பு பஞ்சமில்லாமல் சிறப்பாக இருக்கும் என தெரிய வருகிறது குறிப்பாக அறம் போல இந்தப் படமும் இருக்கும் என தெரிய வருகிறது. O2 படத்தை ஜிஎஸ் விக்னேஷன் இயக்கியுள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் ஒவ்வொரு படம் வரும்போதும் தனது பெயருக்கு முன்னாடி லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை போட்டுக்கொள்வது நயன்தாராவின் பழக்கம்.
அது போல இந்த படத்திலும் தனது பெயருக்கும் முன்னால் தனது படத்தைப் போட வேண்டும் என தயாரிப்பாளர் விக்னேஷ் -யிடம் கூறி உள்ளார் ஆனால் இதுவரைக்கும் போடாமல் இழுத்துக் கொண்டு தான் இருக்கிறார். நயன்தாராவுக்கு முன்னாடி லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை போடாமல் தயாரிப்பாளர் இழுத்தடிப்பது தற்போது நயன்தாராவுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.