வேற லெவல் ஸ்கிரிப்டில் விஜய் சேதுபதி உடன் இணையும் வெற்றிக் கூட்டணி.! தாறுமாறாக இருக்கும் என தயாரிப்பாளர் அப்டேட்

Vijay sethupathi: கோலிவுட்டில் முன்னணி நடிகராக கலக்கி வரும் நடிகர் விஜய் சேதுபதி சமீப காலங்களாக பான் இந்திய படங்களில் நடித்து வருகிறார். அப்படி தற்பொழுதெல்லாம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. முக்கியமாக விஜய் சேதுபதி ஹீரோவாக இல்லாமல் வில்லனாக நடிக்கும் திரைப்படங்கள் தான் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து கொண்டிருக்கிறது.

எனவே தொடர்ந்து இவர் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக சினிமாவில் பணியாற்ற தொடங்கிய விஜய் சேதுபதி பல போராட்டங்களுக்குப் பிறகு கொலிவுட்டில் டாப் ஹீரோவாக தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். தற்பொழுது டோலிவுட், பாலிவுட் என மாஸ் காட்டி வருகிறார்.

பழனிச்சாமி கூட பாக்கியா போறது ரொம்ப தப்பு.. காண்ட்ராக்ட் வேலையை கெடுக்க சதி திட்டம் போடுவாரா கோபி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

அப்படி சமீப காலங்களாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. ஆனால் வில்லனாக நடித்த ஜவான், விக்ரம் போன்ற படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. எனவே இதனால் தொடர்ந்து வில்லன் கேரக்டருக்கு வாய்ப்புகள் தேடி வருவதாக கூறப்படுகிறது. தற்போது தனது 50வது படமான மகாராஜா படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில் இதற்கு முன்பு சூது கவ்வும் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இப்படத்தினை நலன் குமாரசாமி இயக்கினார் இவ்வாறு விஜய் சேதுபதி – நலன் குமாரசாமி கூட்டணி ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. சூது கவ்வும் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி-நலன் குமாரசாமி கூட்டணியில் காதலும் கடந்து போகும் என்ற படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

‘துருவ நட்சத்திரம்’ படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனத்தை வெளியிட்ட பிரபல இயக்குனர்..

மீண்டும் இவர்களுடைய கூட்டணி இணையுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர் தற்பொழுது நலன் குமாரசாமி வா வாத்தியாரே என்ற படத்தினை இயக்கி வருகிறார் இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து மீண்டும் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் மற்றொரு படத்தினை இயக்க உள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீப பேட்டியில் கூறியிருந்தார். மேலும் விஜய் சேதுபதிக்காக நலன் குமாரசாமி வேற லெவலில் ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்துள்ளதாகவும், முக்கியமாக இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் மேலும் ஹீரோக்கள் இணைய உள்ளதாகவும், இந்த படத்தின் அப்டேட் வெளியானதுமே எதிர்பார்ப்பு தாறுமாறாக இருக்கும் எனவும் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.