முதல் படம்.. முதல் நாள்.. சிவாஜியை காக்க வைத்து விட்டு பெரியப்பாவை பார்க்க போன பிரபு – கண்கலங்கிய நடிகர் திலகம்

Prabhu : நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில் களம் இறங்குவது வழக்கம் அந்த வகையில் தலைமுறைக்காக நடித்து வருபவர்கள் தான் சிவாஜி குடும்பம்.. நடிகர் திலகம் சிவாஜியை தொடர்ந்து அவரது மகன் பிரபு  சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தார். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். அதன் பிறகு காதல் படங்களின் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை பிரபு உருவாக்கிக் கொண்டார்.

அவரை தொடர்ந்து அவரது மகன் விக்ரம் பிரபுவும் தமிழ்திரை உலகில் வெற்றி நடிகராக ஓடிக் கொண்டிருக்கிறார். நடிகர் பிரபு முதல் முதலில் நடித்த திரைப்படம் “சங்கிலி” இந்த படத்தை சி. வி. ராஜேந்திரன் இயக்க பிரபுவுடன் இணைந்து சிவாஜி, மேஜர் சுந்தர்ராஜன், சுருளி ராஜன், ஸ்ரீபிரியா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

வாய்ப்பு தரேன் பண்ணை வீட்டுக்கு போகலாமா..? வடிவேலுவின் பசிக்கு இறையாகிய நடிகைகள்..? உண்மையை உடைத்த பிரபலம்..

இந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங் ஆரம்பித்தது அன்று சிவாஜி தனது மகன் பிரபுவை கூட்டிட்டு சென்றுவிடலாம் என அவருக்காக காத்திருந்தார். ஆனால் பிரபுவோ சிவாஜியை நீங்கள் மட்டும் முதலில் செல்லுங்கள் நான் பின்னால் வந்துவிடுகிறேன் என கூறிவிட்டாராம் இதனை கேட்ட சிவாஜி முதல் நாளே படப்பிடிப்புக்கு தாமதமாக வருவியா..

அதெல்லாம் தப்பு சீக்கிரம் என் கூடவா என்று கூறியுள்ளார் முதல் காட்சியே நாம் இருவரும் சேர்ந்து நடிப்பது தான் எனவும் பிரபுவிடம் சிவாஜி கூறியுள்ளார் ஆனால் அசராத பிரபு சிவாஜியை அனுப்பிவிட்டு சில நேரங்களில் தாமதமாக படப்பிடிப்பிற்கு வந்திருக்கிறார் பிரபு லேட்டாக வந்ததை பார்த்த சிவாஜி அவரைத் திட்டி ஏன் லேட் என்று கேட்டுள்ளார்.

விஜயகாந்த் – ராவுத்தர் போல நானும், அந்த இயக்குனரும் இருக்க ஆசைப்பட்டோம் நடக்கவில்லை – அமீர் பேச்சு

அதன் பின்னர் சிவாஜியிடம் பிரபு உண்மையை கூறியிருக்கிறார் அவர் சொன்னது முதல் படம் முதல் நாள் ஷூட்டிங் என்பதால் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று பெரியப்பாவிடம் ஆசிர்வாதம் வாங்க சென்றேன் என்று தெரிவித்துள்ளார் பிரபு பெரியப்பா என சொன்னது எம்ஜிஆர்ரை தான் இதை கேட்ட சிவாஜி பிரபுவை கட்டி அனைத்தையும் கண்கலங்கி விட்டாராம் தனது அப்பா சிவாஜியே பெரிய நடிகனாக இருந்தாலும் எம்ஜிஆர் மீது அதிக மரியாதை வைத்திருந்தார் பிரபு