“இரண்டு சீன்” பண்ணி கொடுங்க மேம்.. கெஞ்சிய இயக்குனர்கள் வெளுத்து விட்ட நடிகை ஜோதிகா.!

Jyothika : வாலி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஜோதிகா முதல் படத்திலேயே தன்னுடைய திறமையையும், கவர்ச்சியையும் காட்டி அசத்தினார். அதனைத் தொடர்ந்து விஜய், சூர்யா, அஜித், ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோகளுடன் படங்கள் பண்ணி வெற்றி நடிகையாக மாறினார்.

காக்க காக்க படத்தின் போது சூர்யாவுக்கும், இவருக்கும் இடையே காதல் வலுவானதால் பின் திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்களுக்குப் பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். ராட்சசி, மகளிர் மட்டும், காற்றின் மொழி, பொன்மகள் வந்தால் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார்.

தமிழ் நாட்டில் முதல் 100 கோடி, 200 கோடி வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.? வியந்து போன கமல், விஜய்

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான காதல் தி கோர் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று ஓடியது படத்தில் மம்முட்டி ஹீரோவாக இருந்தாலும் அவருக்கு நிகரான கதாபாத்திரம் ஜோதிகாவுக்கு கொடுக்கப்பட்டது இந்த படம் தான் ஜோதிகாவுக்கு மலையாளத்தில் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் தமிழிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம் அதுவும் இரண்டு சீன்கள் நடிக்கும் படியான சின்ன கதாபாத்திரம் தான்  அதிகமாக வருகிறதாம் பல இயக்குனர்களும் ஜோதிகாவிடம் வந்து “இரண்டு சீன் மேம்” எப்படியாவது நடித்துக் கொடுங்கள் என்று கேட்கிறார்களாம் இதை நான் மரியாதை குறைவாக நினைக்கிறேன்..

எவன் காசுல எவன் ஜல்சா பண்றது.! இளம் நடிகையுடன் ஒல்லி இயக்குனர் செஞ்ச கூத்து.. கடுப்பான தயாரிப்பாளர்..

அது எப்படி என்னிடம் வந்து கேட்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை சின்ன ரோலோ.. பெரிய ரோலோ.. அந்தந்த ரோலுக்கு என்று மதிப்பு இருக்கு என ஜோதிகா கூறியுள்ளார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள்  சின்ன ரோலோ.. பெரிய ரோலோ..  எல்லாமே சினிமா தானே.. ஜோதிகா மேம் சூப்பர் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகிறனர்.