பாண்டவர் பூமி படத்தில் நடித்த ஷமிதாவை ஞாபகம் இருக்கா… இவரின் கணவர் சன் டிவி பிரபலமா..

Pandavar Bhoomi: இளம் வயதிலேயே சினிமாவிற்கு அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரை நடித்து வரும் ஏராளமான பிரபலங்கள் உள்ளனர். இவ்வாறு வெள்ளித்திரையின் மூலம் கிடைக்காத பிரபலம் சின்னத்திரையின் மூலம் கிடைத்து பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாகி உள்ளார்கள்.

அந்த வகையில் பாண்டவர் பூமி திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகையின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 2021ல் வெளியான பாண்டவர் பூமி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவர் தான் நடிகை ஷமிதா. இப்படத்தில் தோழா தோழா பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

திருநங்கையாக மாறப்போகும் சிம்பு.. இதற்கெல்லாம் காரணம் தனுஷ் தானா.?

ஷமிதாவிற்கு தொடர்ந்து சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார். பிறகு சின்னத்திரையில் சீரியல்களில் தொடர்ந்து நடித்த வரும் இவர் சிவசக்தி, வசந்தம், பிள்ளை நிலா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த சீரியல் நடிகர் ஸ்ரீ குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

Pandavar Bhoomi
Pandavar Bhoomi

எதிர்மறை கேரக்டரில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி என்ற சீரியலில் நடித்து வந்தார் கடந்த வருடம் இதிலிருந்து விலகினார். இவரது கணவர் ஸ்ரீ குமார் தற்பொழுது சன் டிவியின் வானத்தைப்போல சீரியலில் ஹீரோவாக நடித்த வருகிறார்.

படிக்காதவன் படத்தில் குட்டி ரஜினியாக நடித்த நடிகர் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.?

ஷமிதா மற்றும் ஸ்ரீ குமார் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக பல தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அது உண்மை இல்லை என விளக்கம் கொடுத்த இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைராலாகி வருகிறது.