தளபதி விஜய் மேல வச்ச நம்பிக்கையே போயிடுச்சு என கதறி அழும் பாண்டியன் ஸ்டோர் ஜீவா!! வீடியோ வைரல் …

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்  சீசன்1 ல் நடித்ததன் மூலம் பிரபலமானவர் வெங்கட். இந்த சீரியல் 5 ஆண்டுகளுக்கு மேல் கடந்து வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம்  ஓடிக்கொண்டிருக்கிறது.பாண்டிய ன் ஸ்டோரில் ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் மீனாவுக்கு கணவனாக நடித்து மிகவும் பிரபலமானார்.

பாண்டியன் ஸ்டோர் சீசன் 1 முடிந்த பிறகு அதே விஜய் டிவியில் தற்போது இவர் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும்  வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

கதிர் காலில் விழுந்த கோமதி.. வேற வழியே இல்லாமல் வாழ்க்கையை பணயம் வைக்கும் கதிர்.. பரபரப்பின் உச்சத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்…

அப்படி இவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் எல்லோரின் வாழ்க்கையிலும் ஒரு கனவு இருக்கும் அதற்கான முயற்சிகளை செய்து வருவோம் எனக்கும் அப்படி ஒரு கனவு இருந்தது. அப்படி ஒரு கனவு தான் விஜய் அண்ணாவுடன் ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்பதுதான்.

கடவுளிடம் தினமும் வேண்டுவேன் ஒரு காட்சியில் கூட நிற்பது போலவாவது நடித்து விட வேண்டுமென நேற்று வேண்டினேன் அதற்கு முந்தைய நாளும் வேண்டினேன் என எமோஷனலாக கூறியுள்ளார்.

காலில் விழுந்து எவ்வளவு கெஞ்சியும் “நோ” சொன்ன இளையராஜா.! பல வருடங்கள் கழித்து பார்த்திபன் பகிர்ந்த உண்மை சம்பவம்.!

அதாவது தற்போது தளபதி விஜய் சினிமாவை விட்டுவிட்டு  முழுமையாக அரசியலுக்கு வர போவதாக கூறியுள்ளார். இதனால் இனிமேல் அவர் கூட இணைந்து நடிக்க முடியாது என்ற வருத்தத்தில் இப்படி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் தளபதி கூட சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யுங்கள் கவலை வேண்டாம் நடிப்பதை விட தளபதி பக்கத்தில் என்றும் நிற்பீர்கள் கவலை வேண்டாம் எனவும் அது மட்டுமல்லாமல் மேலும் பலர் எங்களுக்கு விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.