உங்க அப்பா, அம்மா கிட்ட பேசி என்ன பொண்ணு கேட்க வர சொல்லும் மீனா.. முழி பிதுங்கும் செந்தில் – பாண்டியன் ஸ்டோர் 2 ப்ரோமோ..

Pandian stores 2 serial promo November 19 : பாண்டியன் ஸ்டோர் சீரியல் சமீபத்திய எபிசோடுகளில் கோமதி உடைய பிறந்தநாளுக்கு கதிர் விடியற்காலை 12 மணிக்கு அம்மாவை எழுப்பி கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினார் மற்ற பசங்களும் கோமதிக்கு வாழ்த்து தெரிவித்தனர் ஆனால் பாண்டியன் மட்டும் கோமதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை..

அதனால் என்னோட பிறந்த நாளை மறந்துட்டாரு என்று கோமதி ரொம்ப வருத்தத்தில் இருந்தார் ஆனால் பாண்டியன் கோமதியை சர்ப்ரைஸ் பண்ணுவதற்காக புடவை வாங்கிட்டு போய் சாயந்திரமா பிறந்தநாள் வாழ்த்து சொன்னார் அதை பார்த்து கோமதி ரொம்ப சந்தோஷப்பட்டார். பிறகு பாண்டியனும் கோமதியும் கோவிலுக்கு போகினர்.

முத்துவின் வேலை போன விஷயத்தை வீட்டில் சொல்ல.. சொந்தக் காரயே திரும்பி வாங்கி கொடுத்த அண்ணாமலை – சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ..

அங்கு சக்தி வேலும், முத்துவேலும் தங்கச்சி பிறந்தநாளை மறக்காமல் அன்று கோமதி பெயரில் கோவிலில் அர்ச்சனை பண்ணினர்.. இது போக காந்திமதியும் பாயாசம் செய்து கோமதி வீட்டிற்கு கொடுத்து அனுப்பினார்.. இந்நிலையில்  பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் மீனாவை பொண்ணு பார்ப்பதற்காக மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்திருக்கின்றனர் இந்த செய்தியை மீனா செந்தில் இடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அப்பொழுது மீனாவுடைய அம்மா மீனாவிற்கு மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட்டாங்க எங்க இருக்க உடனே வீட்டுக்கு வா என்று வாய்ஸ் மெசேஜ் பண்ணி இருக்கிறார்.

சந்தானத்திற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் பேட்டி.! 30 கோடி வரை வளரணும்..

இதை செந்திலிடம் போட்டு காண்பித்து இப்ப என்ன பண்றது என கேட்கிறார் அதற்கு செந்தில் திடீர்னு உன்னை பொண்ணு பார்க்க வருவாங்கன்னு யாருக்கு தெரியும் ஒரு ஃபார்மாலிட்டிக்கு இப்ப போய் நில்லு அப்புறம் பாத்துக்கலாம் என செந்தில் சொல்கிறார். ஆனால் மீனா பொண்ணு பாக்குறதே ஃபார்மாலிட்டிக்கு தான்..

உடனே டேட் பிக்ஸ் பண்ணிடுவாங்க அதனால நான் இப்ப வீட்டுக்கு போகல, நீ வீட்டுக்கு போய் உங்க அப்பா அம்மா கிட்ட பேசி அவங்கள எங்க வீட்ல வந்து பொண்ணு கேக்க சொல்லு என்று மீனா செந்தில் இடம் பேசி அனுப்பி வைக்கிறார் ஆனால் செந்தில் என்ன முடிவெடுப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..