பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலகும் பிரபலம்.! இனிமேல் ஜீ தமிழின் புதிய சீரியலில் ..

baakiyalakshmi-serial
baakiyalakshmi-serial

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து தற்போது பிரபலம் ஒருவர் விலக இருக்கும் நிலையில் இது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப இளவரசிகளின் நிலைமையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தனது கணவர் தன்னை அசிங்கப்படுத்தி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பிறகும் கௌரவமாக பாதுகாப்புடன் தொடர்ந்து பல முயற்சிகளை செய்து துணிச்சலாக பாக்கியா இருந்து வருகிறார். அப்படிதான் தற்பொழுது ராதிகா ஈஸ்வரியை அசிங்கப்படுத்தி வீட்டை விட்டு வெளியே போ எனக் கூறிய நிலையில் பாக்யா புது அவதாரம் எடுத்துள்ளார்.

அதாவது கோபியிடம் இன்னும் ஒரு மாதத்தில் 18 லட்சம் ரூபாய் பணத்தை தந்து விடுகிறேன் எனவே இந்த வீட்டை விட்டு நீங்கள் கிளம்பி விட வேண்டும் என கூறியுள்ளார் அதற்கு கோபியும் ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில் பாக்கியா ஒரு மாதத்தில் பணத்தை தர முடியாது என்ற தைரியத்தில் இருந்து வருகின்றனர். மறுபுறம் பழனிச்சாமி மூன்று நாள் 5000 பேருக்கு சமைக்க வேண்டும் என்ற மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை கொடுத்துள்ளார்.

இவ்வாறு பாக்யா முன்னேறுவதற்கு உறுதுணையாக இவருடைய மருமகள்களும் இருந்து வரும் நிலையில் இந்த சீரியலில் மூத்த மருமகளாக ஜெனி மற்றும் அமிர்தா இவர்களுடன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது. மேலும் எதார்த்தமாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெனி கேரக்டரில் நடித்து வரும் நடிகை இந்த சீரியலில் இருந்து விலக இருக்கிறார்.

அதாவது சொல்லும் அளவிற்கு ஜெனியின் கேரக்டர் இதில் இடம்பெறவில்லை எனவே அனைவரும் ரசிக்கும் வகையிலும் பாராட்டும் வகையிலும் தனது கேரக்டர் இருக்க வேண்டும் என்பதற்காக ஜீ தமிழின் புதிய சீரியலில் நடிக்க இருக்கிறாராம்.

அதாவது ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் சீரியல் ஒன்றில் இரண்டு குழந்தைங்களுக்கு அம்மாவாக நடித்த திட்டமிட்டு இருக்கிறாராம் குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தாலும் இவருடைய கேரக்டருக்கு தான் முக்கியத்துவம் இருப்பதால் இந்த சீரியலில் நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.