கேப்டனை மீண்டும் திரையில் கொண்டு வர பலே திட்டம்.. இந்த மெகா ஹிட் திரைப்படத்தின் இரண்டாவது பாகமா…

Oomai Vizhigal 2 : 1986 ஆம் ஆண்டு ஆர் அரவிந்த் இயக்கத்தில் விஜயகாந்த், கார்த்தி, அருண்பாண்டியன், சந்திரசேகர், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோர் நடிப்பில் திரில்லர் திரைப்படமாக உருவாகியது தான் ஊமை விழிகள் இந்த திரைப்படத்தை ஆபாவாணன் தயாரித்திருந்தார்.

பிலிம்ஸ் இன்ஸ்டியூட் மாணவர்கள் இணைந்து இந்த திரைப்படத்தை உருவாக்கினார்கள் அதனால் இந்த திரைப்படம் மிகச்சிறந்த திரில்லர் திரைப்படமாக தமிழில் வெளியானது. அதேபோல் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்களுக்கு சினிமா துறையில் பல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

2024ல் வில்லனாக நடித்து மிரட்டப்போகும் 3 நடிகர்கள்.. அடக்கொடுமையே இவங்க எல்லாம் வில்லனா நடிச்சதே கிடையாதா..?

பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்களின் பல திரைப்படங்களில் நடித்து ஆஸ்தன கதாநாயகனாக வளம் வந்தார். விஜயகாந்த் சமீபத்தில் டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார் இவரின் மரணம் சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் உலுக்கியது. அதுமட்டுமில்லாமல் இவர் மறைந்ததை அடுத்து ஆபாவாணன் சென்னை திரைப்பட கல்லூரியில் நடந்த விஜயகாந்த் நினைவு நிகழ்ச்சியில் பேசினார்.

அவர் பேசும் பொழுது ஊமை விழிகள் இரண்டாவது பாகத்தை விஜயகாந்தை AI தொழில்நுட்பத்தில் உருவாக்க வேண்டுமென பேசி உள்ளார் இந்த தகவல்  விஜயகாந்த் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ரஜினிக்கு நோ சொல்லி.. விஜயின் GOAT படத்தில் கமிட்டான மலையாள நடிகர்!