தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம்சரண். இவரது அப்பா தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி என்பது குறிப்பிடத்தக்கது இருவரும் தற்போது பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ராம்சரண் – னின் RRR படம் அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வருகிறது.
மேலும் இந்த படத்தில் ராம் சரண் நடிப்பில் வேற லெவல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் இதுவரை சுமார் 700 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து ராம்சரண் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் உடன் கைகோர்த்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.
மறுபக்கம் அவரது அப்பா நடித்துள்ள ஆச்சாரியா திரைப்படம் வெகுவிரைவிலேயே அதாவது வருகின்ற 29 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை 140 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் ராம்சரண் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் கைகோர்த்து பூஜா ஹெக்டே, சோனு சூட், காஜல் அகர்வால் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.
இந்த படம் வெகு விரைவிலேயே வெளிவர உள்ளதால் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த படத்தில் நடித்த காஜல் அகர்வால் மட்டும் நீங்கள் மட்டும் படத்தை நடித்து கொடுத்ததற்கு போதும் புரோமோஷன் விஷயங்களில் ஈடுபட வேண்டாம் என கூறியுள்ளார்.

காரணம் அவர் மாசமாக இருப்பதால் வீட்டில் பத்திரமாக இருங்கள் நல்லபடியாக இருங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். நடிகை காஜல் அகர்வால் இந்த படத்தை தவிர கமீட்டான மற்ற படங்களில் இருந்து விலகி உள்ளார். குறிப்பாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இந்தியன் 2 , ரௌடி பேபி படத்தில் இருந்தும் விலகி உள்ளார்.