திரும்பி திரும்பி கேட்கதோன்றும் ஏ ஆர் ரகுமானின் 10 பாடல்கள்.! திகட்டாத பாடல்கள்

AR Rahman best 10 songs: இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் என அனைவரும் இவருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் ஏ.ஆர் ரகுமான் குறித்த பல தகவல்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வரும் நிலையில் இவரது இசையில் வெளியான டாப் 10 பாடல்கள் குறித்த லிஸ்டையும் வெளியிட்டுள்ளனர். ஏ.ஆர் ரகுமானின் 57வது பிறந்த நாளை ஒட்டி 30 ஆண்டுகள் இசை பயணத்தில் அவர் இசையில் வெளியான டாப் 10 படங்கள் குறித்த லிஸ்ட் இதோ.

1. ரோஜா படத்தில் இடம்பெற்ற ‘புது வெள்ளை மழை’ பாடல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இப்படத்தின் வரிகள் முதல் பிஜிஎம் வரை இன்றளவிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

2. எஸ்பிபி சித்ரா குரலில் டூயட் பாடலாக அமைந்த அஞ்சலி அஞ்சலி பாடலும் ரசிகர்களை கவர்ந்தது.

மனைவியை பக்கத்தில் வச்சுக்கிட்டு நடிகைக்கு அம்பு விட்ட 5 ஹீரோக்கள்.. அலறவிட்ட மிஷ்கின்

3. கருத்தம்மா திரைப்படத்தில் மறைந்த சுவர்ணலதா குரலில் வெளியான போராலே பொண்ணுதாயி பாடல் ஏ.ஆர் ரகுமானின் கிளாசிக் பாடல்களில் ஒன்றாக அமைந்தது.

4. பாம்பேய் படத்தில் இடம்பெற்றிருக்கும் கண்ணாலனே என்ற பாடலும் தற்பொழுது வரையிலும் ரசிகர்களின் ஃபேவரட் பாடலாக உள்ளது இதில் ஏ.ஆர் ரகுமானின் தனி சிறப்பான கிளாசிக்கல் இசையில் உருவானது.

5. ரஜினியின் முத்து திரைப்படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி ஹைப் பாடல் பலருடைய உற்சாகப் பாடலாக அமைந்துள்ளது.

6. ஜீன்ஸ் படத்தில் வெஸ்டர்ன் கிளாசிக் இசையில் உருவான ஹயிரா ஹைரா ஹைராபா பாடல் மூலம் ரசிகர்களை துள்ளல் போட வைத்தார் ஏ ஆர் ரகுமான்.

7. உயிரே படத்தில் இடம்பெற்ற தைய்யா தைய்யா பாடல் உள்ளிட்ட அனைத்து படங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

முதல் 200 கோடி வசூல் செய்த 5 தமிழ் நடிகர்களின் திரைபடங்கள்..!

8. முதல்வன் படத்தில் இடம்பெற்ற குறுக்கு சிறுத்தவளே பாடல் வரிகள் இப்பொழுதும் கிறங்கடித்து வருகிறது.

9. அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தை இடம்பெற்ற என்ன சொல்ல போகிறாய் பாடல் தற்பொழுது வரையிலும் காதலர்களின் ஃபேவரிட் பாடலாக உள்ளது.

10. சில்லுனு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற முன்பே வா என் அன்பே வா பாடல் காதலர்களை மயக்கம் பாடலாக அமைந்துள்ளது.