குரு உச்சத்தில் இருந்தால் தான் இதுபோல நடக்கும்.. முரளி நடிக்கவிருந்த 3 படத்தை அலேக்காக தூக்கிய விஜய்.!

Vijay : தமிழ் சினிமாவில்  இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய் அவரது ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு தோல்வி படங்களை சந்தித்திருக்கிறார்.. நடிகர் விஜய் சினிமாவில் என்ட்ரியான்ன ஆரம்பத்தில் இவரது பெரும்பாலான படத்தை அவரது அப்பா எஸ் ஜே சந்திரசேகர் தான் இயக்கி தயாரித்திருந்தார்..

அப்பாவின் பின்புலத்தை வைத்து சினிமாவில் நுழைந்த விஜய்க்கு ஒரு கட்டத்தில் இயக்குனர் விக்ரமன் தான் பூவே உனக்காக படத்தில் விஜயை ஹீரோவாக நடிக்க வைத்தார் அந்த படம் வெற்றி அடைய செய்தார்.. பூவே உனக்காக படத்தின் கதையை இயக்குனர் விக்ரமன் முதலில் முரளியை வைத்து தான் எழுதி இருந்தார்.

என்ன காதலிச்சிட்டு மூத்த நடிகர் உடன் ரூம்ல என்ன வேலை.? ஸ்லிம் நடிகையை நடுரோட்டிலேயே.. வாரிசு நடிகர் செய்த அட்டூழியம்…?

ஆனால் அப்பொழுது முரளி ஒரு பிசியான நடிகராக இருந்ததால் சில காரணங்களால் இந்த படத்தில் முரளி நடிக்க முடியாமல் போக பின்பு இந்த வாய்ப்பு விஜய்க்கு வந்தது.. இதே போல் விஜய் நடித்து வெளியான  காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தின் வாய்ப்பும் முதலில் முரளி நடிக்க இருந்து பின்பு விஜய்க்கு சென்றதாம்..

இந்த இரண்டு படங்களை தொடர்ந்து மூன்றாவதாகவும் முரளி நடிக்க இருந்த ஒரு படத்தின் வாய்ப்பு விஜய்க்கு சென்று இருக்கிறது அந்தப் படம் தான் சந்திரலேகா. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்திருந்தார்..

ராதிகாவின் வருங்கால மாப்பிள்ளை யார் தெரியுமா? ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்ட கார்த்திகா..

முரளி நடிக்க இருந்து பின்பு விஜய்க்கு கைமாறிய இந்த மூன்று படங்களுமே விஜயின் ஆரம்ப காலக் கேரியரில் திருப்புமுனை படமாகும்… தற்பொழுது தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக கலக்கி வரும் விஜயை இந்த மூன்று படங்களின் மூலமாக தான் ஒரு ஹீரோவாகவே ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள தொடங்கினர்.

Exit mobile version