ராதிகாவின் வருங்கால மாப்பிள்ளை யார் தெரியுமா? ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்ட கார்த்திகா..

Actress Radha: நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில் தனது வருங்கால கணவரின் முகத்தை சோசியல் மீடியாவில் வெளியிட வைரலாகி வருகிறது. நடிகை கார்த்திகா நாயர் தொடர்ந்து சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகினார்.

தற்பொழுது வெளிநாட்டில் செட்டில் ஆகி பிசினஸ் செய்து வரும் நிலையில் சமீபத்தில் தனது நிச்சயதார்த்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார். ஆனால் இவருடைய வருங்கால கணவரின் முகத்தை ரிவில் செய்யாமல் இருந்த கார்த்திகா தற்பொழுது ரொமான்டிக்கான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆகாதவன் கைபட்டாளே குத்தம் என போல.. பாக்கியாவை மூளையில் உட்கார வைக்க நினைக்கும் கோபி, ஈஸ்வரி – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

நடிகை ராதாவின் மகள் கார்த்திகாவுக்கும் ரோஹித் மேனன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இவ்வாறு விரைவில் இவர்களுக்கு திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் ஜோடி பொருத்தம் ரொம்ப நல்லா இருக்கு என்று கூறி வருகின்றனர்.

karthika nair

கார்த்திகாவை திருமணம் செய்து கொள்ளப் போகும் ரோஹித் மேனன் யார் என கூகுளில் அதிகம் தேடுபட்டுள்ளது ஆனால் இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்திருந்தாலும் பிரைவேட்டாக வைத்திருக்கிறார் ரோஹித் மேனன். இவர் என்ன தொழில் செய்கிறார் என்பதும் தற்பொழுது வரையிலும் தெரியவில்லை விரைவில் இவர் குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

karthika nair

கார்த்திகா நன்றாக படித்திருக்கும் நிலையில் நடிகை மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். இவருடைய தந்தையின் ஹோட்டல் பிசினஸை எடுத்து நடத்தி வருகிறார் கார்த்திகா. 17 வயதில் நடிக்க தொடங்கிய கார்த்திகா தனது அம்மா போலவே அழகாக இருக்கக்கூடியவர். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே 2015ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி உள்ளார் கார்த்திகா.

Exit mobile version