2023-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கோலிவுட் நடிகைகள்.! ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த மாடல் அழகி….

Tamil Actress: சினிமாவை பொறுத்தவரை பெரும்பாலும் நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் தான் வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை இது நடைமுறையில் இருந்து வந்தாலும் சமீப காலங்களாக ஒரு சில முன்னணி நடிகைகள் கோடிக்கணக்கில் நடிகர்களுக்கு சமமாக சம்பளம் வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினாலே கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகைகளும் உள்ளனர். அந்த வகையில் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல மவுசு இருந்து வரும் நிலையில் ஹீரோயின்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

என் வீட்டுக்கு வந்து பாத்தியா? பயில்வான் ரங்கநாதனை அனைவரும் முன்பும் கிழித்து தொங்க விட்ட கீர்த்தி பாண்டியன்

அப்படி தற்பொழுது 2023-ல் அதிகம் ட்ரெண்டிங் ஆக கூகுளில் தேடப்பட்ட நடிகைகள் குறித்து பார்க்கலாம். ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடியதன் மூலம் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து அவர்தான் நடிகை தமன்னா. இவருடைய நடனம் பட்டித்தொட்டி எங்கும் வைரலாக சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைவரும் ரிலீஸ் வீடியோவை சோசியல் மீடியாவில் தெறிக்க விட்டு வந்தனர்.

இவரை அடுத்து நடிகை திரிஷா பொன்னியின் செல்வன், விஜய்யுடன் லியோ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தனர். இவ்வாறு 2023ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் நடிகைகள் குறித்த விவரம் தற்பொழுது வெளியாகி உள்ளது.

வருடத்தின் தொடக்கத்தில் திரிஷா முன்னணியில் இருந்தாலும் காவாலா பாடலுக்கு பிறகு தமன்னா தான் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்து உச்சத்திற்கு சென்றுள்ளார். பிறகு த்ரிஷா மீண்டும் முன்னணிக்கு வர தொடங்கியுள்ளார் இது குறித்த புள்ளி விவரங்களை ரசிகர்கள் ஷேர் செய்ய இதனை திரிஷா இன்ஸ்டாவில் ஷேர் செய்து நன்றி கூறி இருக்கிறார்.

ரஜினியின் உழைப்பாளி திரைப்படத்தில் நான்தான் நடிக்க வேண்டியது பல வருடங்கள் கழித்து உண்மையை கூறிய பிரபலம்.

விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா தற்பொழுது அஜித்துக்கு ஜோடியாக விடா முயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் மன்சூர் அலிகான் மற்றும் த்ரிஷா இவர்களுக்கிடையான பெரிய சர்ச்சை ஆன நிலையில் ஆனால் த்ரிஷா மன்சூர் அலிகானை மன்னித்துவிட்டார்.