சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை மீனாவுக்கு ஏற்பட்ட விபத்து.! பலத்த காயத்துடன் அவரே வெளியிட்ட வீடியோ..

Siragadikka Aasai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் சிறக்கடிக்க ஆசை இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. டிஆர்பி-யிளும் முதலிடத்தில் இருக்கும் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஒரு நடுத்தர குடும்பத்தில் மூன்று மகன்கள் இருந்தால் என்ன பிரச்சனைகள் வரும் திருமணமானால் எப்படி எல்லாம் மருமகள்கள் போட்டி போட்டுக் கொள்வார்கள் என்பதை அடிப்படையாக வைத்தும் பணத்தின் மீது பைத்தியமாக இருக்கும் மாமியார் விஜயா பணக்கார மருமகளை மட்டும் நன்றாக பார்த்துக் கொள்வது மீனாவை மட்டும் வேலைக்காரி போல் நடத்தி வருகிறார்.

ஆள விடுங்கடா சாமி என கட்டின பொண்டாட்டியை விவாகரத்து செய்த 5 நடிகைகள்…

என்னதான் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் தனது குடும்பத்திற்காக மீனா வேலை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல் முத்துவும் தொடர்ந்து வேலைகள் செய்து தனது குடும்பத்திற்கு தேவையான செலவுகளை பார்த்து வருகிறார். முத்து மீனாவிற்காக பூக்கடை வைத்து கொடுக்க அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இவ்வாறு குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் மீனா-முத்து விஜயாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அப்படி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா இவர் இதற்கு முன்பு விஜய் டிவியில் வேலைக்காரன் சீரியலில் நடித்திருந்தார்.

சிம்புவால் சீரழிந்த ஆறு நடிகைகள்… சார்மி முதல் நிதி அகர்வால் வரை இத்தனை நடிகைகளா..

தமிழையும் தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற தொடர்களில் நடித்து வரும் கோமதி பிரியா மலையாள சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காலில் அடிப்பட்டு உள்ளது. அந்த வீடியோவை வெளியிட்டு இதுதான் படப்பிடிப்பில் எனக்கு ஏற்பட்ட முதல் காயம் என தெரிவித்துள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..