முத்துவின் மொபைலை எடுத்த மீனா… சத்தியா சிக்குவாரா.. தெரியப்போகும் உண்மை..

siragadikka aasai February 24 latest : சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அப்பா தேவசத்திற்கு முத்து போகிறார் அப்பொழுது அனைவரும் கேள்வி கேட்கிறார்கள் இதனால் முத்துவுக்கு கோவம் வருகிறது அந்த சமயத்தில் சத்யா சூடம் காட்ட கையை தூக்கும் பொழுது வலிக்கிறது அதனால் ஓவர் ரியாக்ஷன் பண்ணுகிறார். இதனால்  முத்து வெளியே நிக்கும் பொழுது மீனாவின் அம்மா எல்லாத்துக்கும் கோவம் வரும் இவருக்கு என்ன இப்படி ஒரு கோவம் வருது என் பொண்ண நெனச்சா தான் எனக்கு கவலையா இருக்கு.

இப்படி ஒரு முரடானுக்கு என் பொண்ண கொடுத்துட்டேனே என பேசிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் முத்து கேட்டுக் கொண்டே உள்ளே வருகிறார் இன்னும் என்ன வேணாலும் சொல்லுங்க முரடன், காட்டன், ரவுடி என்று சொல்லுங்கள் என பேசுகிறார். அதுமட்டுமில்லாமல் வாய்க்கு வந்தபடி பேசியதால் முத்துவுக்கு கோவம் வருகிறது அந்த சமயத்தில் கூப்பிட்டு வச்சு அசிங்க படுத்துறீங்களா என பேச அதற்கு சத்யா உங்களை யார் கூப்பிட்டது? உங்களை யாரும் வெத்தலை பாக்கு வச்சு அழைக்கவில்லையே என பேசுகிறார் சத்யா .

வீட்டிற்கே சென்று மீண்டும் சத்யாவை அடித்த முத்து.. என் முகத்திலேயே முழிக்காத என கூறும் அண்ணாமலை…

இதனால் கோபப்பட்ட முத்து சத்யாவை மீண்டும் அடிக்கிறார். சத்யாவை அடித்து விட்டு கோபமாக வீட்டிற்கு செல்கிறார் வீட்டிற்கு சென்ற மீனா அண்ணாமலை இடம் நடந்த அனைத்தையும் கூற அண்ணாமலை கோவப்பட்டு முத்துவை திட்டுகிறார். அதுமட்டுமில்லாமல் சுருதிக்கும் ரவிக்கும் சண்டை ஏற்படுகிறது அதனால் மூவரும் மொட்டை மாடியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் முத்து மனோஜ் ரவி மூன்று பேரும் மொட்டை மாடியில் தூங்க சென்றுள்ளார்கள்.

அதேபோல் கிச்சனில் மீனா, ரோஹினி, ஸ்ருதி  மூன்று பேரும் டீ குடித்துக்கொண்டே பேசிக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோவில் முத்து மொபைலில் அந்த வீடியோவை பார்த்து மிகவும் கோபமாக பெட்டில் குத்துகிறார் அந்த சமயத்தில் மீனா பார்த்துக் கொண்டிருக்கிறார் உடனே என்னத்த மொபைலில் பார்த்தார் இப்படி ஒரு கோபம் என பேசிக்கொண்டே முத்துவின் மொபைலை எடுக்கின்றார்.

விஜய் செய்தது போல் செய்யணுமா.. அப்போ கண்டிப்பா நீ இத செஞ்சி தான் ஆகணும் பிரசன்னாவுக்கு கண்டிஷன் போட்ட சினேகா..

முத்துவின் மொபைலில் வீடியோவை பார்ப்பாரா மீனா, சத்தியாவின் குட்டு வெளிப்படுமா மீனாவின் நிலைமை இனி என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.