லியோ பட சொதப்பலுக்கு நான் தான் காரணம்.. வெளிப்படையாக பேசிய லோகேஷ் கனகராஜ்.!

Lokesh kanagaraj: இயக்குனர் லோகேஷ் நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நிலையில் அதில் லியோ படத்தின் இரண்டாவது பாதி சொதப்பலுக்கு நான்தான் காரணம் என வெளிப்படையாக கூறி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று கார்த்தியின் ஜப்பான் பட இசை வெளியீட்டு விழா நேர் உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கார்த்தி, ராஜ் முருகன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, அனு இமானுவேல், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் இந்த விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு அனைத்திற்கும் பதில் அளித்துள்ளார்.

என் பையனை நீ எப்படி ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகலாம் மகாவிடம் சண்டை போட்ட ராஜலட்சுமி ..உண்மையை சொன்ன சூர்யா -ஆஹா கல்யாணம் ப்ரோமோ

லோகேஷ் கூறியதாவது, லியோ படம் மக்களுக்கு பிடித்து இருக்கிறது. திரையரங்கிற்கு மக்கள் வருவதை பார்க்க முடிகிறது ஆனால் லியோ படத்தின் இரண்டாவது பாதியில் லாகிங் இருப்பதாக விமர்சனங்கள் வருகிறது. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் இப்போது  தான் நான் ஊரில் இருந்து வருகிறேன் படம் வெளியானதும் என் வேலை முடிந்துவிட்டது. படத்தின் வசூல் என்பது எனக்கு தெரியாது இனிமேல்தான் அதைப் பற்றி தயாரிப்பாளர் கேட்க வேண்டும்.

லியோ பட வெளியிட்டேன் பொழுது லோகேஷுக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக இணையதளத்தில் செய்திகள் பரவி வந்தது எனவே இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப இதற்கு பதில் அளித்த லோகேஷ் இந்த செய்தி எல்லாம் எங்கே இருந்து வருகிறது என்று தெரியவில்லை என கூறினார். மேலும் தலைவர் 171வது படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவித்துள்ளார்.

இப்படியே போனா மார்க்கெட் அவ்வளவுதான்… பருத்திவீரன் கார்த்தி போல் தர லோக்கலாக இறங்கிய விக்ரம்.! வைரலாகும் வீடியோ

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் கலவை விமர்சனங்களுக்கு மத்தியில் முதல் வாரத்தில் ரூபாய் 461 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.