2024 ரேசில் குதித்த திரைப்படங்கள்.. மலையுடன் மோத போகும் துரும்பு.. இருந்தாலும் உங்களுக்கு தில்லு ரொம்ப அதிகம் தம்பி

Tamil Movies: தொடர்ந்து வாரம்தோறும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு நல்ல லாபத்தை கொடுக்கும் ஆண்டாகவே அமைந்தது இதனை அடுத்து 2024ஆம் ஆண்டு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் தரமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.

பொங்கல் ரிலீஸ்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு நான்கு திரைப்படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளது. அதன்படி விஜய் சேதுபதி நடித்துள்ள மெரி கிறிஸ்துமஸ், தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய் ஆக்சன் ஹீரோவாக மிரட்டி இருக்கும் மிஷன் பாகம் 1 ஆகிய திரைப்படங்கள் 2024ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

அடக்கொடுமையே பிக் பாஸ் போட்டியில் இருந்து அடுத்து வெளியேறப் போவது இவரா.. சற்றும் எதிர்பார்க்காத தகவல்..

குடியரசு தின ரிலீஸ்: பொங்கல் பண்டிகையை தொடர்ந்து குடியரசு தினத்தன்று அதாவது 2024ஆம் ஆண்டின் ஜனவரி 26ஆம் தேதி இரண்டு தமிழ் திரைப்படங்கள் வெளியாகிறது. அதன்படி ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 ஆகிய படங்கள் வெளியாகிறது.

மார்ச் மாதம்: பா ரஞ்சித்-சியான் விக்ரம் கூட்டணியில் தரமாக உருவாகி இருக்கும் தங்கலான் படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பணிகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால் தங்கலான் மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து விடுதலை படத்தின் இரண்டாவது பாகம், பாலா இயக்கிய வணங்கான் ஆகிய படங்களும் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகிறது.

ஏப்ரல் மாதம்: கோடை விடுமுறையான ஏப்ரல் மாதத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன், கமலஹாசனின் இந்தியன் 2 ஆகிய பிரம்மாண்ட திரைப்படங்கள் ஏப்ரலில் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

உன்னை தூக்கி விட்டவன் நான்.. சூர்யாவை நேரம் பார்த்து நோகடித்த பாலா.. வெளிவரும் உண்மை

மே மாதம்: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 68 திரைப்படம் மே மாதம் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படமும் அவரது பிறந்த நாளான மே 1ம் தேதி ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.