2023-ல் அறிமுகமாக இருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர்கள் லிஸ்ட்.. குட் நைட் படத்தால் அடித்த ஜாக்பாட்

2023 Debutant Directors: 2023ஆம் ஆண்டில் தமிழில் அறிமுக இயக்குனர்களின் திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது அப்படி எந்தெந்த அறிமுக இயக்குனர்களின் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது என்பது குறித்த லிஸ்ட்டை பார்க்கலாம்.

இந்த ஆண்டு தொடர்ந்து ஏராளமான நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் 2023ஆம் ஆண்டு இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடைய இருக்கும் நிலையில் 2024ஆம் ஆண்டு தொடங்க உள்ளது. எனவே இந்த ஆண்டு சினிமாவில் சிறப்பாக பங்கு பெற்ற பிரபாகங்கள் குறித்து பல தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை.. 27வது பட இயக்குனர் பிரேம்குமாரா? ‘கார்த்தி 27’ பட அப்டேட்..

கொரோனா பிரச்சனையினால் சினிமா மட்டுமல்லாமல் உலகில் இருக்கும் அனைத்து தொழிலாளர்களும் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அனைத்து பிரச்சனைகளும் சரியாகி இந்த ஆண்டுதான் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. அப்படி சினிமாவில் இந்த ஆண்டு புதுமுக இயக்குனர்களின் படங்கள் வெற்றி பெற்று நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.

அந்த வகைகள் கவின் நடிப்பில் வெளியான டாடா படம் கணேஷ் பாபு இயக்கினார் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் சிறந்த இயக்குனரான இடத்தை பிடித்துள்ளார் கணேஷ் பாபு. இவரை அடுத்து சசிகுமாரின் அயோத்தி படத்தை இயக்கிய மந்திரமூர்த்திக்கு இதுவே முதல் படமாகும். மேலும் மிக குறைவான பட்ஜெட்டில் உருவாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் தான் குட் நைட் இப்படத்தினை விநாயக் சந்திரசேகரன் என்பவர் இயக்கினார். இப்படத்தினை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

மாஸான சீனை மாத்தி சொன்ன முதியவர்.. விஜய் கொடுத்த கமெண்ட்டை கேட்டு சிரித்த படக்குழு.!

மேலும் சசிகுமார், அசோக் செல்வன் கூட்டணியில் வெளியான படம் போர் தொழில் இப்படத்தினை சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக விக்னேஷ் ராஜா என்பவர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு 2023ஆம் ஆண்டு புது முக இயக்குனர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் அமைந்திருப்பது மகிழ்ச்சியினை அளிக்கிறது.