கார்த்திக்கு ஜோடியாகும் பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை.. 27வது பட இயக்குனர் பிரேம்குமாரா? ‘கார்த்தி 27’ பட அப்டேட்..

Karthi 27 Movie Update: நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜப்பான் திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது. எனவே வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் தோல்வி அடைந்த நிலையில் இதனால் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஜப்பான் படத்தின் தோல்விக்கு பிறகு கார்த்தி தனது அடுத்த கட்ட பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கார்த்தியின் 27வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்தியின் 25வது படமாக ஜப்பான் அமைந்தது.

மாஸான சீனை மாத்தி சொன்ன முதியவர்.. விஜய் கொடுத்த கமெண்ட்டை கேட்டு சிரித்த படக்குழு.!

இதற்கான இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பிறகு இவருடைய நடிப்பில் வெளியாகும் இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இதனை அடுத்து வினோத் போன்ற பல முக்கிய இயக்குனர்களுடன் கார்த்தி பணியாற்றி உள்ளாராம். அந்த வகையில் 96 படத்தினை இயக்கிய இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 27வது படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதில் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் சென்னை திரும்பியதற்கு காரணம் என்ன.? வெளியே கசிந்த தகவல்

இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பிரபல சீரியல் நடிகை நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான ஈரமான ரோஜாவே 2 தொடரில் பிரியா என்ற கேரக்டரில் நடித்து வரும் சுவாதி தான் கார்த்தியின் கதாநாயகியாக இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை விரைவில் அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.