அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில் அஜித் மடியிலேயே கை வைக்க பார்த்த ரஜினி.! பரபரப்பை கிளப்பிய இயக்குனர்..

lingusamy open talk about rajini : லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் லியோ திரைப்படத்தின் கதையை கேட்டு விட்டு ஒரு சில காட்சிகளை ஜெயிலர் திரைப்படத்தில் பயன்படுத்திக் கொண்டதாக பெரும் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் முன்னதாக அஜித் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி தனக்கான படமாக மாற்றி எடுக்க சொன்னதாக பிரபல இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

லியோ திரைப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் பேட்டியில் லியோ திரைப்படத்தின் காட்சிகளை நடிகர் ரஜினிகாந்த் அப்படியே சொன்னார் எனக் கூறியிருந்தார் அந்த அளவு லோகேஷ் கனகராஜ் அவர்கள் ரஜினியிடம் லியோ திரைப்படத்தின் கதையை கூறி இருப்பது தெரியவந்துள்ளது. அதன் காரணமாக இரண்டு திரைப்படங்களிலும் பல காட்சிகள் ஒரே மாதிரியாக இருந்ததாக பலரும் கூறி வருகிறார்கள்.

இந்த தீவாளிக்கு ஜிகர்தண்டா இனிப்பா ஜில்லுன்னு இருந்துச்சா…? வைரலாகும் முழு விமர்சனம்.!

ஒரு வருடத்திற்கு முன்பே ஹயானா காட்சி சிஜி வேலை அதிகமாக இருந்ததால் அதனை முடித்துக் கொடுத்துவிட்டார் லோகேஷ் கனகராஜ் எனக் கூறியிருந்தார். அதேபோல் காட்சி ஜெயிலரிலும் சிவராஜ்குமார் என்ட்றியின் பொழுது இடம்பெற்றதா என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் அஜித்தை வைத்து லிங்குசாமி அவர்கள் ஜி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் ஆனால் இந்த திரைப்படம் ஆரம்பிக்கும் முன்பே லிங்கு சாமியிடம் ரஜினி அஜித்திற்கு என்ன கதை வைத்துள்ளீர்கள் என கேட்டதும் லிங்குசாமி சொல்லி உள்ளார்.

உடனே ரஜினி ஓகே ஆகிடுச்சா என கேட்டுள்ளார் இன்னும் இல்லை சார் பேச்சுவார்த்தையில் தான் இருக்கிறது என கூறினாராம் உடனே இந்த கதையை எனக்கு பண்ணினா எப்படி இருக்கும் என கேட்டுள்ளார். இதனால் லிங்குசாமி அதிர்ந்து உள்ளார்.  காலேஜ் பையனாக என் கதையில் ஹீரோ நடித்துள்ளார் உங்களுக்கு எப்படி கதையை மாற்ற முடியும் என லிங்குசாமி ரஜினியிடம் கேட்க.

இந்த தீவாளிக்கு ஜிகர்தண்டா இனிப்பா ஜில்லுன்னு இருந்துச்சா…? வைரலாகும் முழு விமர்சனம்.!

உடனே ரஜினி அதனை அப்படியே பேக்டரிக்கு கொண்டு வந்து அரசியல் படமாக பண்ணலாமே என கதையை சொல்லி உள்ளாராம் ஆனால் அதன் பிறகு அஜித் அந்த திரைப்படத்திற்கு ஓகே சொன்னவுடன் ரஜினியை விட்டுவிட்டு அஜித்தை வைத்து ஜீ திரைப்படத்தை பண்ணினார் என லிங்குசாமி கூறியதாக தகவல் வெளியானது.