வெளியானது லியோ சென்சார்.! கெட்ட வார்த்தை வன்முறை காட்சி நிறைய இருக்கோ.?

Leo : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மிஷ்கின் என மிகப் பெரிய நட்சத்திர பட்டம் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தை வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்கள் அதற்கான போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் அர்ஜுன் பிறந்தநாளிலும் சஞ்சய் பிறந்தநாளிலும் அவர்களுடைய வீடியோவை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்திருந்தது.

லியோ படம் ஒண்ணுக்கும் பிரயோஜனம் இல்லை.. பொழுதுபோக்கிற்காக பாக்கலாம் – பரபரப்பை ஏற்படுத்திய பிரபலம்

இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள் ஆனால் கடைசி நிமிடத்தில் இசை வெளியீட்டு விழா கிடையாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். மேலும் ஏற்கனவே சமூக வலைதளத்தில் லியோ திரைப்படத்தின் கதை இதுதான் என கூறியிருந்தார்கள்.

sanjay dut ANTONY DAS
sanjay dut ANTONY DAS

அதாவது விஜய் அண்ணன் தம்பி பாசத்தை மையமாக வைத்து ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய விக்ரம், திரைப்படம் கைதி மாஸ்டர், மாநகரமாகிய திரைப்படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே வன்முறைகள் கெட்ட வார்த்தைகள் கண்டிப்பாக இருக்கும். அதிலும் வன்முறை காட்சிகள் ட்ரக்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் சென்சார் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது லியோ திரைப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர்கள் U/A சான்றிதழ் கொடுத்துள்ளார்கள்.

தலைவர் 170 : ரஜினி “கெட்டப்”.. மீண்டும் அண்ணாமலையை கண்ணுக்கு முன் கொண்டு வந்த புகைப்படம்

அதுமட்டுமில்லாமல் படத்தை பார்த்த சென்சார் குழு படம் பிரமாண்டமாக இருந்ததாக கூறியுள்ளார்கள்.

leo arjun
leo arjun